India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மருத்துவர் குகானந்தம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் தமிழக அரசின் தொற்றுநோய் தடுப்பு சிறப்பு குழு ஆலோசகராக இருந்த குகானந்தம், டெங்கு நோய் குறித்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இந்நிலையில், நுரையீரல் பாதிப்பு காரணமாக நேற்று அவர் உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்ததாக தெரிவித்த முதல்வர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் பணியில், உயிரிழக்கும் பணியாளர்களுக்கான நிவாரணத் தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, சமூகவிரோத செயல்களால் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ₹30 லட்சமாகவும், பிற காரணங்களால் இறப்போருக்கு ₹15 லட்சமாகவும் நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, நிரந்தர ஊனமடைபவர்களுக்கு ₹7.5 லட்சம், காயம் அடைவோருக்கு ₹40,000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
வங்கதேசம் – ஆஃப்கானிஸ்தான் இடையேயான சூப்பர் 8 போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் மழை காரணமாக 19 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கான் அணி, 20 ஓவர்களில் 115 ரன்கள் குவித்தது. தொடர்ந்து, வங்கதேசம் பேட்டிங் செய்து வரும் நிலையில் பலமுறை மழை குறுக்கிட்டது. ஆகையால் 19 ஓவர்களில் 114 எடுத்தால் வெற்றி என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றது அதிமுகவினர் கண்களை உறுத்துவதாக, முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றார். மேலும், தனக்கு எதிரான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடைகோரிய இபிஎஸ், தற்போது சிபிஐ விசாரணை கோருவது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க, அதிமுக எம்எல்ஏக்களுக்கு இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர், இந்த விவகாரத்தை பேரவையில் உடனடியாக விவாதிக்க வலியுறுத்தி தொடர் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் அப்பாவு, இன்று ஒருநாள் விவாதத்தில் பங்கேற்க அனைவருக்கும் தடை விதித்தார்.
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுகவினர் பேசியது எதுவும் அவைக்குறிப்பில் பதிவேற்றப்படாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தை அதிமுகவினர் வேண்டுமென்றே அவமானப்படுத்துவதாக கூறிய அவர், ஏன் புறக்கணிக்கின்றனர் என்பதே தெரியவில்லை என்று கண்டனம் தெரிவித்தார். கேள்வி நேரத்தைதான் முதலில் நடத்த வேண்டும் என்ற சட்டப்பேரவை விதியையும் அவர் சுட்டிக் காட்டினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளும் என்பது உறுதியாகியிருக்கிறது. 3 சூப்பர் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பதால் இந்திய அணி, புள்ளிப் பட்டியலில் (குரூப் 1) முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆகையால், குரூப் 2வில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்தை ஜூன் 27ஆம் தேதி எதிர்கொள்ளவுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து அதிமுகவினரை வெளியேற்ற, சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை, பேரவையில் விவாதிக்க அதிமுக MLA-க்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், சட்டப்பேரவை இன்று கூடியபோது மீண்டும் அந்த விவகாரத்தை கையிலெடுத்த அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர் உத்தரவை அடுத்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
‘களத்தில் மீண்டும் போர்வீரர்கள்’ என திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது. நாடாளுமன்றம் நேற்று கூடியபோது புதிய எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்றனர். அப்போது, கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்டோருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட மஹுவா அதனை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 2024 vs 2019 களத்தில் மீண்டும் போர் வீரர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது வைரலாகி வருகிறது.
ஹட்சன் நிறுவனத்தின் தயாரிப்பான ஆரோக்யா பால் மற்றும் தயிர் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. ₹68க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பால் (full cream) கடந்த வாரம் ₹66ஆக குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ₹1 குறைக்கப்பட்டு ₹65ஆக விற்கப்படுகிறது. விற்பனை சரிவதன் காரணமாக பால் விலை குறைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
Sorry, no posts matched your criteria.