India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த நிதியாண்டில் 29,082 ஆன்லைன் மோசடியில் ₹1,457 கோடி சுருட்டப்பட்டுள்ளதாக RBI அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், RTI-யில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ₹1 லட்சத்துக்கும் குறைவான தொகையை கணக்கில் கொண்டால், அந்த எண்ணிக்கை 2.7 லட்சமாகவும், தொகையும் ₹653 கோடி கூடும் என்றும், ஒவ்வொரு நாளும் 800 ஆன்லைன் மோசடி நடந்துள்ளது, இது அறிக்கையை விட 10 மடங்கு அதிகமென்றும் RBI தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர், கடந்த 3 ஆண்டில் 65,483 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் 17,595, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 19,260, மருத்துவ தேர்வு வாரியம் மூலம் 3,041, சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 6,688 என மொத்தம் 75,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
T20 உலகக் கோப்பை தொடரில், முதல்முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி ஆஃப்கன் அணி வரலாறு படைத்துள்ளது. இதனால் அந்த அணியின் வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர். குறிப்பாக, AFG அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரஷித் கான், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இதனிடையே அரையிறுதிக்கு முன்னேறிய AFG அணிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
1955 இந்து திருமணச் சட்டத்தின் 13ஆவது பிரிவில், தம்பதிகள் எதற்கெல்லாம் விவாகரத்து பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருமணத்தை மீறிய தகாத உறவு, மனம் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல், குழந்தை பேறின்மை, சொல்லி கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறுதல், மதம் மாறுதல், மனநிலை பாதித்தல், தீராத நோய், 7 ஆண்டுக்கு மேல் தகவல் இல்லாதது ஆகியவற்றுக்கு விவாகரத்து பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மக்களவை சபாநாயகர் ஒருமித்த கருத்து அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும். இம்முறை துணை சபாநாயகர் பதவி அளிக்கவில்லையேல், வேட்பாளரை நிறுத்துவோம் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லாவையே மீண்டும் தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளுடன் இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் பேச்சு நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டி20 உலகக் கோப்பையில் இன்றைய சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானை வங்கதேசம் வீழ்த்தினால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நினைப்புடன் ஆஸ்திரேலியா இருந்தது. ஆனால் ஆஃப்கன் வென்றதால் ஆஸி.யின் கனவு தகர்ந்தது. அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. 2019 டி20, 2023 ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியா வெளியேறியது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது
உள்நாட்டில் விலை அதிகரிப்பு, பதுக்கலை கட்டுப்படுத்த கோதுமையை இருப்பு வைக்க மத்திய அரசு 2023 ஜூன் முதல் 2024 மார்ச் வரை கட்டுப்பாடு விதித்திருந்தது. அதன்படி, மொத்த விற்பனையாளர்கள் 3,000 டன்னும், சில்லறை விற்பனையாளர்கள் 10 டன்னும் இருப்பு வைக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த கட்டுப்பாடு இரண்டரை மாதத்துக்கு முன்பு விலக்கப்பட்ட நிலையில், மீண்டும் இம்மாதம் முதல் 2025 மார்ச் வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அவர், விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம், அமெரிக்க ராணுவ ரகசியத்தை வெளியிட்டதால் சர்வதேச அளவில் பிரபலமானார். இதையடுத்து அவர் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கைதாவதை தவிர்க்க, லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். 2019இல் ஈக்வடார் அரசு தனது ஆதரவை வாபஸ் பெற்றதால், அவர் கைதானார்.
வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் போராடி வெற்றி பெற்றிருக்கிறது ஆஃப்கானிஸ்தான். 19 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய ஆஃப்கானிஸ்தான், இறுதி ஓவர் வரை போராடியது. குறிப்பாக, துவக்க வீரராக களம் இறங்கிய லிட்டன் தாஸ், இறுதி வரை ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் குவித்தார். மற்ற அனைவரும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
T20 உலகக் கோப்பை தொடரில், முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஃப்கன் அணி. சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று ஆஃப்கன்-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த AFG 115/5 ரன்கள் எடுத்தது. 116 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய BAN அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் அரையிறுதிக்கு முன்னேறி ஆஃப்கன் அணி புதிய வரலாறு படைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.