India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்த மாணவர்களுக்கான முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறியலாம். இதனிடையே, இந்தப் பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இருக்காது.
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், சுங்கச்சாவடிகளை குறைப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சரிடம் தமிழக நெடுஞ்சாலைத்துறை பேசிவருகிறது என்றார். மேலும், மாமல்லபுரம் செல்லும் சாலையில் ஏற்கெனவே 4 சுங்கச்சாவடிகளை அகற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அரையிறுதிப் போட்டியை எட்டியுள்ளது. இந்த நிலையில், T20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிகம் முறை 4 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலை காணலாம்.
*ரஷித் கான் – ஆஃப்கானிஸ்தான் – 9 முறை
*ஷகிப் அல் ஹசன் – வங்கதேசம் – 8 முறை
*ஹென்றி செனியோண்டோ – உகாண்டா – 7 முறை
*உமர் குல் – பாகிஸ்தான் – 6 முறை
*புவனேஸ்வர் குமார் – இந்தியா – 5 முறை
ஈஷா யோகா மையம் வனத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கிறதா என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலானா கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஆய்வறிக்கைக்கு பின்னர்தான் அது தெரியவரும் என்றார். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், மூன்றாடுகளாகவா ஆய்வு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அமைச்சரை கடிந்து கொண்டார்.
ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம், இந்தியாவுக்கு எதிராக நேற்று அவர் விளையாடியதே கடைசி போட்டியாக அமைந்துள்ளது. ஏற்கெனவே அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், நேற்றோடு டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்கிறார்.
தமிழகத்தில் மாலை 4 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ராவை சேர்ந்த ஜிம் பயிற்சியாளரை இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு திருமணம் செய்தார். கணவரின் கட்டுமஸ்தான உடலை கண்ட அவர், தனது எடையை குறைக்க உதவக் கோரினார். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் உடல் எடை 75 கிலோவில் இருந்து குறையாததால், போலீசில் புகாரளித்த அவர், தற்போது விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். ஆனால் கணவரோ, மனைவியுடன் வாழவே விரும்புகிறார்.
தமிழகத்தில் இன்றும் நாளையும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 27ஆம் தேதி நீலகிரி, கோவை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள ராயன் படம், ஜூலை 26இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தனுஷின் 50ஆவது படமான ராயன், ஆக்ஷன், த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், நித்யா மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராயன் படத்தை எழுதி, இயக்கியது தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், தமிழக உளவுத்துறை தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்த அவர், வனத்துறைக்கு தெரிந்துதான் சாராயம் காய்ச்சப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்த விவகாரத்தில் வனத்துறை அதிகாரிகளையும் விசாரிக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.