news

News June 25, 2024

நள்ளிரவில் ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டது பாஜக!

image

மக்களவை சபாநாயகர் தேர்வு விவகாரத்தில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் நள்ளிரவில் போன் செய்து பாஜக ஆதரவு கேட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல்வர் ஸ்டாலினை போன் மூலம் அழைத்து “மக்களவை சபாநாயகரை, எதிர்க்கட்சிகள் உட்பட அனைவரின் ஒருமித்த ஆதரவுடன் தேர்வு செய்ய வேண்டும்” என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அதேபோல், மற்ற தலைவர்களுக்கும் போன் அழைப்பு சென்றுள்ளது.

News June 25, 2024

துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளின் உரிமை

image

மக்களவை துணை சபாநாயகர் பதவி தங்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மத்திய பாஜக அரசு உடன்படாததால், சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் எம்பி கொடிகுன்னில் சுரேஷ் போட்டியிடுகிறார். இதுகுறித்து பேசிய அவர், சபாநாயகர் பதவி ஆளும்கட்சிக்கானது போல, துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளின் உரிமை, அந்தப் பதவி தராததால், தான் போட்டியிடுவதாகவும் குறிப்பிட்டார்.

News June 25, 2024

ஆஸி., அணியின் அஸ்திவாரம் டேவிட் வார்னர்

image

2009ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், இதுவரை 161 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 22 சதம், 22 அரை சதங்களுடன் மொத்தம் 6,932 ரன்கள் குவித்துள்ளார். 2023இல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஆஸி., அணி சாம்பியனான நிலையில், அத்துடன் ODI போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

News June 25, 2024

‘P’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்கள்?

image

‘P’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்டவர்கள் வசீகரமானவர்களாகவும், நகைச்சுவை தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். கலை உணர்வு, படைப்பாற்றல் & கற்பனைத்திறன் மிக்க நபர்களாக இருப்பார்கள் என்றும், அதேநேரம், அவர்கள் ரிஸ்க் எடுக்க பயப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். ‘P’ என்ற எழுத்தில் பெயர் கொண்ட உங்கள் நண்பர்கள் & குடும்ப உறுப்பினர்களுக்கு இதை பகிருங்கள்.

News June 25, 2024

10 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த நயன்தாரா-நஸ்ரியா

image

2013இல் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாரா – நஸ்ரியா ஆகியோர் நடித்து இருந்தனர். அப்போது இருவரும் நட்பாக பழகினர். பின்னர், நஸ்ரியா நடிகர் பகத் ஃபாசிலை திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகினார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் குடும்பத்தோடு சந்தித்தபோது, எடுத்த புகைப்படம் தற்போது வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

News June 25, 2024

தமிழ்நாடு எம்.பிக்கள் தமிழில் பதவியேற்பு

image

மக்களவையில் உறுப்பினர்கள் 2ஆவது நாளாக பதவியேற்று வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியைச் சேர்ந்த 40 எம்.பிக்கள் தமிழில் பதவியேற்று வருகின்றனர். டி.ஆர்.பாலு, செல்வம், கெஜத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் பதவியேற்றனர்.

News June 25, 2024

தென்மேற்கு பருவமழை 122% கூடுதலாகப் பதிவு

image

தென்மேற்கு பருவமழை, இயல்பைவிட தமிழகத்தில் அதிகம் பொழிந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஜூன் 1 முதல் ஜூன் 25 வரை 97.3 மி.மீ. மழை பொழிந்துள்ளது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில், 43.8 மி.மீ. மழை பொழியும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தற்போது இயல்பைவிட 122 சதவீதம் கூடுதலாக மழை பொழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

News June 25, 2024

கொடிகுன்னில் சுரேஷ் யார்?

image

மக்களவை சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கொடிகுன்னில் சுரேஷ், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஆவார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மாவேலிகரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதுவரை மக்களவைத் தேர்தலில் 8 முறை போட்டியிட்டு வென்றுள்ளார். 2012-2014ஆம் ஆண்டில் மத்திய இணையமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைமை கொறடாகவும் பதவி வகித்துள்ளார்.

News June 25, 2024

ஆதார் PVC அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

ஆதார் PVC அட்டை வேண்டுமெனில், <>https://uidai.gov.in/en/<<>> இணையதளம் சென்று MY Aadhaar பிரிவுக்குள் நுழைய வேண்டும். பிறகு, ஆதார் எண், கேப்சாவை உள்ளிட்டால், மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை உள்ளிட்டு நுழைந்தால், PVC அட்டைக்கு விண்ணப்பிக்கும் வசதி இருக்கும். அதில் ₹50 கட்டணம் செலுத்தியதும், சேவை கோரிக்கை எண் மொபைல் எண்ணுக்கு வரும். அதன்பிறகு PVC அட்டை தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

News June 25, 2024

விஷச்சாராய பலிக்கு ₹10 லட்சம்: நீதிபதி அதிருப்தி

image

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு ₹10 லட்சம் தருவது தவறான முன்னுதாரணம் என உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், 100 நாள் வேலைத் திட்டம், இன்றைய இளைஞர்களை சோம்பேறிகளாக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதன்மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருப்பதால், மதுவுக்கு மாற்றாக வேறு சில போதை வஸ்துக்களை தேடி செல்வதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!