news

News June 25, 2024

விஜய், சீமான் கூட்டணியால் ஆட்சிக்கு வர முடியாது

image

விஜய், சீமான் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாதென தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். விஜய் கட்சியும், சீமான் கட்சியும் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அப்போது, 2 கட்சிகளும் கூட்டணி அமைத்தால் 16-20% வாக்குகளே கிடைக்கும். அதன்மூலம் ஆட்சிக்கு வர முடியாது. திமுக கூட்டணியின் வாக்குகள் சிதறும் என்றார்.

News June 25, 2024

ஜெயம் ரவியுடன் எடுத்த படங்களை நீக்கிய ஆர்த்தி

image

நடிகர் ஜெயம் ரவியுடன் உள்ள அனைத்து புகைப்படங்களையும் அவரது மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நீக்கியுள்ளார். இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக செய்திகள் பரவிய நிலையில், அவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் ஆர்த்தியின் செயல் அமைந்துள்ளதாகக் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், விவாகரத்து தொடர்பாக இதுவரை இருவரும் அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் கூறவில்லை.

News June 25, 2024

டெஸ்ட் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்!

image

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை சென்னை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28 – ஜூலை 1ஆம் தேதி வரை நடக்கும் போட்டிகளை இலவசமாக காண முடியும். மேலும், டி20 போட்டிக்கான டிக்கெட் விலை ₹150ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 29ஆம் தேதி முதல் ஆன்லைனில் விற்பனை தொடங்குகிறது.

News June 25, 2024

தைவான் எல்லைக்குள் பறந்த சீன போர் விமானங்கள்

image

தைவான் எல்லைக்குட்பட்ட வான்பரப்பில் 41 சீன போர் விமானங்கள் மேற்கொண்ட ராணுவப்போர் பயிற்சியால் அந்நாட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949ஆம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. இந்த நிலையில், அந்நாட்டை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும், தைவானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

News June 25, 2024

பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டப்படும்: சந்திரபாபு நாயுடு

image

பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு நடந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசியபோது, குப்பம் ரயில் நிலையத்தை பெங்களூரு – சென்னை செல்வதற்கான முக்கிய சந்திப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

News June 25, 2024

மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

image

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் எஸ்.பி.வினோத் குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில், இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News June 25, 2024

₹1.3 லட்சம் கோடியை செலவு செய்ய அதானி குழுமம் திட்டம்!

image

நடப்பு நிதியாண்டில் (FY25) வணிக வளர்ச்சிக்காக அதானி குழுமம் ₹1.3 லட்சம் கோடியை மூலதனச் செலவீனங்களுக்காக ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சி.எஃப்.ஓ ஜுகேஷிந்தர் சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மார்ச் 2025-க்குள் பங்கு மூலதனத்தில் $2.5 பில்லியன் வரை திரட்டவுள்ளதாகவும், 2028இல், பங்குச் சந்தையில் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

image

இன்று காலை 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், இதுபோன்று கைது செய்யப்படுவதை தடுக்கவும், சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இதுபோன்று மீண்டும் நடக்காதவாறு இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தியுள்ளார்.

News June 25, 2024

“கனிமொழி வாழ்க” என முழக்கமிட்ட திமுக எம்.பி.

image

தமிழக திமுக எம்.பி., ஒருவர் ‘கனிமொழி வாழ்க’ என முழங்கி பதவியேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென்காசி தனித் தொகுதி திமுக எம்.பி., ராணி ஶ்ரீகுமார், தமிழில் பதவிப் பிரமாண உறுதிமொழியைக் கூறி பதவியேற்று கொண்டார். இறுதியாக அவர், “எம்.பி., கனிமொழி & அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வாழ்க” என முழக்கம் எழுப்பினார். பதவியேற்ற திமுக எம்பிக்களில் மூவர் மட்டும் எந்த முழக்கமும் எழுப்பவில்லை.

News June 25, 2024

ஜூன் 28 முதல் 30 வரை சிறப்பு பேருந்துகள்

image

வார விடுமுறையை முன்னிட்டு, ஜூன் 28 முதல் 30 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, சேலம் மதுரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும், கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, பெங்களூருவுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், www.tnstc.in, மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!