India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டை வளப்படுத்தும் முக்கிய ஆறாக பாலாறு கருதப்படுகிறது. ஆந்திராவில் 33 கி.மீ கடக்கும் பாலாறு, தமிழகத்தில் மட்டும் 222 கி.மீ தூரம் ஓடுகிறது. பாலாற்றினால் வட ஆற்காடு மாவட்டங்களில் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடைகின்றன. அத்தகைய பாலாற்றில், தடுப்பணைக் கட்டப்படுமென ஆந்திர அரசு அறிவித்துள்ளது. இதனால் வட தமிழகம் பாலைவனமாகி, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மக்களவையில் பதவியேற்ற திமுக எம்.பிக்கள், தலைவர்களின் புகழ் வாழ்க என முழக்கம் எழுப்பி கவனம் ஈர்த்தனர். பெரும்பாலான திமுக எம்.பிக்கள் பெரியார், கலைஞர், ஸ்டாலின் புகழ் வாழ்க என முழக்கமிட்டனர். சிலர் அமைச்சர் உதயநிதி பெயரை சேர்த்துக் கொண்டனர். அந்த வரிசையில், ஆரணி தொகுதி எம்.பி தரணிவேந்தன் பதவியேற்கும் போது, கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, பொதுப்பணித்துறை அமைச்சர் (எ.வ.வேலு) வாழ்க என முழக்கமிட்டார்.
அந்த ஒப்பந்தத்தின் அட்டவணை ‘A’-வில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் காவிரி, பாலாறு உள்ளிட்ட 15 முக்கிய ஆற்று நீர் பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியின்றி, எவ்வித முடிவும் எடுக்கப்படக் கூடாது. குறிப்பாக, மேற்பகுதியில் உள்ள மாநிலங்கள், கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், புதிய அணைக்கட்டையோ அல்லது நீர் தடுப்பு கட்டுமானத்தையோ ஏற்படுத்தக் கூடாது.
1890இல் அன்றைய மைசூர் ராஜ்ஜியம் தமிழகத்திற்கான காவிரி & பாலாற்று நீரை தடுக்க முனைந்தது. இதனை சென்னை தலைமாகாண அரசு கடுமையாக எதிர்த்து போராடியது. இதையடுத்து, இரு அரசுகளுக்கும் இடையே ஆங்கிலேயர் மத்தியஸ்தத்தின் கீழ், 1892இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆற்று நீர் தகராறு தொடர்பான சட்டங்களுக்கு முன்னோடி என இந்த சென்னை-மைசூர் ஒப்பந்தத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ரயில்களில் பயணம் செய்ய, உறவினர்கள் தவிர வேறு யாருக்காவது ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் ₹10,000 அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற தகவல் வேகமாக பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், யாருக்கு வேண்டுமானாலும் டிக்கெட் பதிவு செய்யலாம். ஆதார் அடையாளத்தை உறுதிப்படுத்தி தனிநபர் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 24 டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம் என விளக்கமளித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கடுமையான வலிப்பு நோயால் அவதி அடைந்து வருகிறார். அவரது வலிப்பு நோயை கட்டுப்படுத்தும் வகையில், உலகிலேயே முதல்முறையாக நியூரோஸ்டிமுலேட்டர் என்ற கருவியை சிறுவனின் மண்டை ஓட்டில் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். வலிப்பு நோய் என்பது மூளையில் ஏற்படும் அசாதாரண மின் தூண்டலாகும். இதை புதிய கருவி கட்டுப்படுத்தி, வலிப்பு நோயை 80% குறைத்துள்ளது.
போதைப்பொருள் புழக்கம் குறித்து தமிழ்நாடு அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் உள்ளது? என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் கூறிவருவதாகவும், ஆனால், போதைப்பொருள் இல்லையென அதிகாரிகள் கூறிவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றார்.
ரஷ்யாவும், இந்தியாவும் பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக ஆழ்ந்த நட்புறவை கொண்டுள்ளன. இதற்கிடையில், ரஷ்யாவுக்கு வருகை தரும்படி, மார்ச் மாதம் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, அடுத்த மாதம் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போருக்கு பிறகு, முதல்முறையாக மோடி ரஷ்யா செல்கிறார்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு 24.7.2024-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SSC CGL-2024 மொத்தம் 17,727 காலிப் பணியிடங்கள். ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி நாள் 25.7.24. விண்ணப்பத் திருத்தம் செய்ய கால அவகாசம் ஆகஸ்ட் 10,11. முதல்நிலை கணினி வழி தேர்வு: செப் – அக்டோபர், இரண்டாம் நிலை கணினி வழி தேர்வு: டிசம்பர். மேலும், விவரங்களை https://ssc.gov.in-இல் பார்க்கவும்.
புனே போர்ஷே கார் விபத்து வழக்கில் சிறார் சிறையில் அடைக்கப்பட்ட 17 வயது சிறுவனுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில், சாட்சியங்களை மாற்றியதற்காகக் கைதான சிறுவனின் தந்தை விஷாலுக்கு சில தினங்களுக்கு முன் ஜாமின் கிடைத்தது. சிறுவனின் தாயார், தாத்தா இன்னும் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.