India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காபி குடிப்பவர்களை விட, குடிக்காதவர்கள் இறப்பதற்கு 1.6 மடங்கு அதிகம் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிஎம்சி பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஆய்வறிக்கையில், ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கு மேல் காபி குடிக்காமல் அமர்ந்து வேலை செய்பவர்கள் இறப்பதற்கு 60% வாய்ப்புள்ளதாகவும், நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளில் இருந்து காபி பாதுகாப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கான உதவித் தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. * ஓய்வூதியத்தொகை ₹1000லிருந்து ₹1,200ஆகவும், இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை ₹20,000லிருந்து ₹1,25,000ஆகவும், வாரிய உறுப்பினர்களின் குடும்பத்தை சேர்ந்த 6 -9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ₹1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்ததை அடுத்து, கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன் மலை, தம்புரான்பட்டு, கழுகுமலை பகுதியில் 2,200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராய உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 400 நாள்களுக்கான வைப்புத்தொகைக்கு 7.10% வட்டி வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 400 நாள்களுக்கு 7.25%, கனரா வங்கி 444 நாள்களுக்கு 7.25%, HDFC வங்கி 18 மாதம் முதல் 21 மாதம் வரை 7.25%, ICICI வங்கியில் 15 மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு 7.20%, BOB வங்கியில் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு 7.25%, ஆக்சிஸ் வங்கி 17 மாதங்களுக்கு 7.20% வட்டி வழங்குகின்றன.
பாரீஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தையில் (ரீகர்வ்) 2 தனிநபர், 2 அணி, ஒரு கலப்பு அணி என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடக்கவுள்ளன. அதற்கான தேர்வில் இந்திய அணி நேரடியாக தகுதி பெறவில்லை. இருப்பினும், தகுதி பெறாத அணிகளுக்கான தரவரிசை பட்டியலில், முதலிடம் பிடித்ததால் இந்திய அணி (ஆண்கள், பெண்கள் பிரிவுகள்) மறைமுகமாக தகுதி பெற்றது. தருண்தீப் ராய், தீபிகா குமாரி உள்ளிட்ட 6 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
டக்வொர்த் லீவிஸ் விதியை கண்டுபிடித்த ஃபிராங்க் டக்வொர்த் (84) வயது மூப்பு காரணமாக காலமானார். 1997இல் முதல்முறையாக மழையால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகளை தீர்மானிக்க டக்வொர்த் லீவிஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மீதமுள்ள விக்கெட்டுகள், இழந்த ஓவர்கள் போன்ற பல காரணிகளைக் அடிப்படையாகக் கொண்டு, 2ஆவது பேட்டிங் செய்யும் அணிக்கு திருத்தப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்கிறது.
மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறவுள்ளதால் காங்கிரஸ் & பாஜக எம்.பி.,க்கள் அனைவரும் கட்டாயம் அவைக்கு வர வேண்டுமென அக்கட்சிகள் உத்தரவிட்டுள்ளன. சபாநாயகர் பதவிக்கு INDIA கூட்டணி (சுரேஷ்) & NDA கூட்டணி (ஓம் பிர்லா) இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாளை காலை 11 மணி அளவில் தேர்தல் நடத்தப்படும் என அறியமுடிகிறது. இந்திய வரலாற்றில் சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடத்தப்படவுள்ளது.
ICICI வங்கியின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர்களை (₹8.4 லட்சம் கோடி) கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், 100 பில்லியன் டாலர்களைக் கடந்த 6ஆவது இந்திய நிறுவனம் என்ற பெருமையையும் ICICI பெற்றுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதன் பங்குகள் உயர்ந்ததால், 12% லாபத்தைப் பதிவு செய்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், TCS, பார்தி ஏர்டெல், HDFC & இன்ஃபோசிஸ் ஆகியவை ஏற்கெனவே $100 பில்லியன் கிளப்பில் உள்ளன.
BAN அணிக்கு எதிரான வெற்றியை கிரிக்கெட் உலக ஜாம்பவான் பிரையன் லாராவுக்கு அர்ப்பணிப்பதாக ஆஃப்கன் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். அரையிறுதியை எட்ட வேண்டும் என்ற தங்களது கனவு நிறைவேறியதாகக் கூறிய அவர், அணியில் உள்ள வீரர்களை எண்ணி தான் பெருமைப்படுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். முன்னதாக, ஆஃப்கன் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என பிரையன் லாரா கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
அண்ணாமலை தலைமையிலான பாஜகவில் முக்குலத்தோர் சமூகம் புறக்கணிக்கப்படுவதாகவும், திட்டமிட்டு முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ், நிர்மல் குமார், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நீக்கப்பட்டதாக திருச்சி சூர்யா பட்டியல் வெளியிட்டிருந்தார். இதற்கு ஆர்.கே.சுரேஷ், “பிரதமர் மோடி, அண்ணாமலை என் மீது வைத்துள்ள அன்பினால், நான் தொடர்ந்து பாஜகவில் பயணிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.