India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்தது. *6ஆம் வகுப்பு முதல் AI மற்றும் கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். *ரத்த சொந்தங்கள், உறவினர்கள் தவிர 3ஆம் நபருக்கு டிக்கெட் புக் செய்து கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹10,000 அபராதம் விதிக்கும் வகையில் ரயில்வே சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரைத் தொடர்ந்து சமந்தாவும் பாலிவுட்டில் கால் பதிக்கவுள்ளார்.
ஷாருக் கான் ஜோடியாக புதிய இந்தி படத்தில் நடிகை சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசபக்தியை பின்னணியாக கொண்ட கதையம்சத்தில் உருவாகவுள்ள இப்படத்தை, ராஜ்குமார் ஹிரானி இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்டு மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் 62வது பிறந்தநாளையொட்டி, பல்வேறு நலத்திட்டங்களை அதானி நிறுவனங்கள் முன்னெடுத்தன. அந்த வகையில், 73,500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உதவக்கூடிய ரத்ததான இயக்கத்தின் போது, சுமார் 24,500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட 9,800 லிட்டர் ஆகும். கடந்த ஆண்டு அதானி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அங்கமாக 20,621 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.
* மேஷம் – ஆதாயம் கிடைக்கும், *ரிஷபம் – நன்மை உண்டாகும் *மிதுனம் – தெளிவு கிடைக்கும், *கடகம் – உறுதியாக இருக்க வேண்டும், *சிம்மம் – பெருமையான நாளாக அமையும், *கன்னி – நஷ்டம் ஏற்படும், *துலாம் – உதவி கிடைக்கும், *விருச்சிகம் – வீண் செலவு ஏற்படும், *தனுசு – ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம், *மகரம் – ஆர்வமுடன் செயல்படுவீர், *கும்பம் – பரிவுடன் நடக்கவும், *மீனம் – பயம் உண்டாகும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். அரசின் வருமானத்திற்கு எத்தனையோ தொழில்கள் இருக்கிறதெனக் கூறிய அவர், கனிம வள வியாபாரத்தை மொத்தமாக அரசாங்கமே ஏற்று நடத்தலாம் என்றார். அத்துடன், எந்த வகையிலும் போதை பழக்கத்தை அனுமதிக்க முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
முதல்முறையாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த ஹஜ் புனித பயணிகள் ஒவ்வொருவருக்கும் ₹25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ₹5 கோடியில், தொன்மையான 6 தர்காக்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும், மாநிலம் முழுவதுமுள்ள வக்ஃப் வாரிய நிலங்கள் ₹1 கோடியில், நவீன நில அளவை கருவிகள் மூலம் நில அளவை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், புதிய பொறுப்பிற்கு தனது சகோதரர் ராகுல் காந்தியை இந்தியா வரவேற்பதாகவும், மக்கள் மன்றத்தில் (மக்களவை) அவரது குரல் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும் எனவும் வாழ்த்து கூறியுள்ளார்.
* மாநில அளவில் சிறந்த மூன்று பட்டு விவசாயிகளுக்கு ரூ.2,25,000/- ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
* மாநில அளவில் சிறந்த மூன்று விதைக்கூடு உற்பத்தியாளர்களுக்கு ரூ.2,25,000/- ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
* மாநில அளவில் சிறந்த மூன்று தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த மூன்று பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு ரூ.4,50,000/- ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகையை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, இயற்கை மரணத்திற்கு ₹30,000ஆகவும், விபத்தினால் ஏற்படும் மரணத்திற்கு ₹1,25,000ஆகவும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படவுள்ளது. மேலும், ₹2.94 கோடியில் 693 பி.சி, எம்.பி.சி, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளுக்கு DTH இணைப்புகளுடன் LED தொலைக்காட்சி வழங்கப்படவுள்ளது.
இயந்திரமயமான உலகில் ஓய்வின்றி உழைப்பதால், மன அழுத்தம் அனைவரையும் பாதிக்கிறது. இதனால் தூக்கமின்மை, எடை அதிகரிப்பு, இதய நோய் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கொடிய நோயில் இருந்து விடுபட 6 எளிய வழிகளை மனநல ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன? *மூச்சுப்பயிற்சி * புன்னகைத்தல் *சமூகவலைதளங்கள் *மென்மையான இசை *க்ரீன் டீ *சாக்லேட் ஆகியவை ஆகும்.
Sorry, no posts matched your criteria.