India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ICC-யில் கடந்த 2017ல் ஆஃப்கன் அணி நிரந்தர உறுப்பினரான நிலையில், மிகக் குறுகிய காலத்தில் டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு முதல்முறையாக முன்னேறியுள்ளது. ஆஃப்கனின் வளர்ச்சியில் BCCI-யின் பங்கு முக்கியமானது. உத்தரபிரதேசம் ஆஃப்கனுக்கு தற்காலிக சொந்த மைதானமாக இருந்தது முதல், இந்திய பயிற்சியாளர்களின் பயிற்சி மற்றும் IPL வரை, அந்த நாட்டு வீரர்களை செதுக்கியதில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமாக உள்ளது.
தனக்கு 25 வயது ஆன போதே முடி, தாடி எல்லாம் நரைத்து விட்டதாக நடிகர் விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். முடி நரைத்த சூழலில், இன்னுமா சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருக்கிறாய் என சகோதரி கேட்டதாகவும், அதன் பின்னர் இயக்குநர் பாலு மகேந்திரா, தன்னை புகைப்படம் எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அதன் பிறகு சினிமாவில் பிழைத்துக் கொள்வேன் என தங்கையிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், 3.89 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில், தெற்கு பிரேசிலில் மட்டும் 170 பேர் உயிரிழந்துள்ளனர். இது அமெரிக்க கண்டத்திற்கான பேரழிவுக்கான எச்சரிக்கை என ஐநா தெரிவித்துள்ளது. மனிதர்களை விடுங்கள் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் ஒரு எலியை கூட தன்னால் பார்க்க முடியவில்லை என ஐநாவின் காலநிலை நடவடிக்கை குறித்த சிறப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
*உலக போதைப்பொருள் & சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான நாள் அனுசரிக்கப்படுகிறது. *1274 – பாரசீக கவிஞர் நசீருதீன் அத்-தூசீ மறைந்த நாள். *1483 – மூன்றாம் ரிச்சர்டு இங்கிலாந்தின் அரசனாக முடிசூடினார். *1924 – தலித் போராளி இளையபெருமாள் பிறந்த நாள். *1995 – எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.*1960 – மடகாஸ்கர் பிரான்ஸிடம் இருந்து விடுதலை பெற்றது.
ஆந்திராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி, இந்திய அணியிலும் ஆடியுள்ளார். கடந்த ஆட்சியின் போது, அரசியல் காரணங்களுக்காக மாநில அணியின் கேப்டன் பதவியை இழக்க நேர்ந்ததாகவும், பின்னர் அணியில் இருந்தே நீக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார். இவருக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், இவருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ED தொடர்ந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமினுக்கு தடைவிதித்ததை எதிர்த்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், அதற்கு முன்னதாக அவரை CBI கைது செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கினாலும், அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாது என கூறப்படுகிறது.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட வெங்கல் ராவ், நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், மருத்துவ செலவுகளுக்கு நடிகர்கள், சங்கங்கள் உதவ கோரி உருக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இவருக்கு உதவிட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: அவாவறுத்தல் ▶ குறள் எண்: 365 ▶குறள்: அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர். ▶பொருள்: ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.
லண்டனில் இந்திய வம்சாவளி சீமா மிஸ்ரா, தான் பணிபுரிந்த தபால் நிலையத்தில் பணத்தை திருடியதாக கூறி, 12 ஆண்டுகளுக்கு முன் கர்ப்பமாக இருந்தபோது சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் நிரபராதி எனவும், தவறாக தண்டிக்கப்பட்டார் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில், மிஷ்ரா மீது குற்றம்சாட்டிய நபர், மன்னிப்பு கோரி எழுத்துப்பூர்வ சாட்சி அறிக்கையை அளித்துள்ளார். ஆனால் மன்னிப்பை அவர் நிராகரித்துள்ளார்.
மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடர், வருகிற ஜூலை 19ஆம் தேதி இலங்கையில் தொடங்குகிறது. மொத்தம் உள்ள 8 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 2 குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குச் செல்லும். இந்த நிலையில், தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோத உள்ளன. அதைத் தொடர்ந்து UAE உடன் 21ஆம் தேதியும், நேபாளுடன் 23ஆம் தேதியும் இந்திய அணி மோதுகிறது.
Sorry, no posts matched your criteria.