India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால், மாலை 3 மணிக்கு மேல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சுதந்திர இந்தியா வரலாற்றில் முதல்முறையாக, இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. சபாநாயகராக ஆளுங்கட்சியினரும், துணை சபாநாயகராக எதிர்கட்சியினர் இருப்பது தான் மரபு. ஆனால் இது கடந்த பாஜக ஆட்சியில் பின்பற்றப்படவில்லை. இந்த முறையும் பிடிகொடுக்காததால், NDA கூட்டணியை எதிர்த்து INDIA கூட்டணி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. 293 உறுப்பினர்களைக் கொண்ட பாஜக வேட்பாளர் தான் வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.
*மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. *வெப்ப அலை வீச்சு இனி பேரிடராக அறிவிக்கப்படும் என அமைச்சர் KKSSRR தெரிவித்துள்ளார். *T20 WC அரையிறுதிப் போட்டிக்கு ஆஃப்கன் அணி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. *2026 ஜனவரிக்குள் 75,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *ஆஸி., கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அறிவித்தார்.
இதயத்தை ஆரோக்கியமாக பேண சைக்கிளிங், நீச்சல், நடைபயிற்சியை 30-45 நிமிடங்கள் மேற்கொள்ள வேண்டும். சிவப்பு அரிசி, கருப்பு கவுனி, சீரகச் சம்பா, மாப்பிள்ளை சம்பா ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம். விளமீன், மத்திச்சாளை, டுனா மீன் குழம்புகள் இதயத்திற்கு நல்லது. நார்ச்சத்து நிறைந்த கீரை மற்றும் காய்கறிகளை உண்பது நலம். பொறித்த உணவுகள், ஒரே எண்ணெய்யை பலமுறை பயன்படுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
கென்யாவில் வரிகளை உயர்த்துவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசாருடன், ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் முன் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளரும், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரியுமான அவுமா ஒபாமா மீது கண்ணீர் புகை குண்டு வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
▶ஜூன்- 26 | ▶ஆனி – 12 ▶கிழமை: புதன் | ▶திதி: பஞ்சமி ▶நல்ல நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, இரவு 06:30 – 07:30 வரை ▶ராகு காலம்: பிற்பகல் 12:00 – 01:30 வரை ▶எமகண்டம்: காலை 07:30 – 09:30 வரை ▶குளிகை: காலை 10:30 – 12:00 வரை ▶சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம் ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கஞ்சா வைத்திருப்பது குற்றமாகாது என பிரேசில் உயர்நீதிமன்ற நீதிபதி டோஃபோலி தெரிவித்துள்ளார். இது குறித்த விசாரணை கடந்த 2015 முதல் நடைபெற்று வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் 11 நீதிபதிகளில் மூவர் மட்டுமே குற்றமில்லை என்ற முடிவை எதிர்த்துள்ளனர். மருத்துவ பயன்பாட்டிற்காக ஒரு சில நாடுகளில் கஞ்சா பயன்படுத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
உடல் உஷ்ணம் காரணமாக ஏற்படும் முடி உதிர்வை தடுக்க ஓரிதழ் தாமரை எண்ணெய்யை பயன்படுத்தலாம் என சித்த மருத்துவ நூல்கள் பரிந்துரைக்கின்றன. பொடுதலை, செம்பரத்தை, மருதாணி இலைகளோடு ஓரிதழ் தாமரை இலைகளை அரைத்து நல்லெண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி, முடித் தைலமாக வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால், கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதுடன், பொடுகுத் தொந்தரவின் தீவிரமும் குறையும்.
ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி மக்களவையில் நேற்று பொறுப்பேற்கும் போது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ‘ஜெய் பாலஸ்தீன்’ என கோஷமிட்டார். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப், அவைக்குறிப்பில் பதவியேற்பு உறுதிமொழி மட்டுமே இடம்பெறும் என கூறி, ஓவைசி எழுப்பிய முழக்கத்தை சபைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.
✍மற்றவரின் சுமையை குறைக்கும் ஒருவரை விட இவ்வுலகில் யாரும் அதிகம் போற்ற மாட்டார்கள். ✍நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் மிகப் பெரிய ஆற்றல் உள்ளது. ✍நீதியைப் போல உண்மையிலேயே சிறந்த தெய்வீகமான நற்குணம் எதுவும் இல்லை. ✍உடலுக்கு உடற்பயிற்சி போல மனதிற்கு வாசிப்பு. ✍இயற்கை நோக்கம் இல்லாமல் அல்லது பயனற்ற எதையும் செய்யாது. ✍அழகை விட ஆன்மாவிற்குள் நேரடியாகச் செல்லும் வழி எதுவுமில்லை.
Sorry, no posts matched your criteria.