India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் விஷச்சாராய சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிகிறது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்து ஆளுநரிடம் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனித்தனியே புகார் அளித்திருந்தது கவனிக்கத்தக்கது.
இந்திய அணியின் வீரர் சாய் சுதர்சன் மீண்டும் சர்ரே அணிக்காக நடப்பு கவுன்ட்டி சாம்பியன்ஷிப் சீசனில் சில போட்டிகளில் விளையாட உள்ளார். சென்னையைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான அவர், கடந்த சீசனில் (2023) சர்ரே அணிக்காக இங்கிலாந்தில் நடந்த இரு போட்டிகளில் விளையாடி 116 ரன்கள் அடித்திருந்தார். இதன் மூலம் அந்த அணி 22ஆவது முறை சாம்பியன் பட்டம் வெல்ல பெரும் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில் வெற்றி பெறும் 500 மாணவர்கள், 500 மாணவிகளுக்கு, இளநிலை பட்டப்படிப்பு முடியும் வரை மாதம் ₹1000 என ஆண்டுக்கு ₹10000 (ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்கள்) வழங்கப்படும். அறிவாற்றல், கல்வியில் திறமையுள்ள மாணவர்களை அடையாளம் காண, ஆண்டுதோறும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விவரங்களை, இணையத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசம் ஜூலை 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 21இல் திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளது. முன்னதாக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் விவரங்களை, ஜூன் 21-26 வரை பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
T20 WC தொடரில், ஆஃப்கன் அணி அரையிறுதிக்கு சென்றதை, ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், ஆஃப்கனின் வெற்றிக்கு உதவியதாக இந்தியாவுக்கு தாலிபான்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அந்த அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுஹைல் ஷஹீன் கூறும்போது, தங்களது கிரிக்கெட் அணியின் திறனை வளர்ப்பதில் இந்தியா தொடர்ந்து உதவி வருவதாக தெரிவித்துள்ளார். ஆஃப்கன் நாட்டை தாலிபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவினர் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று சீமான் கேட்டுக் கொண்டார். விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற பரப்புரையில், ”அதிமுகவுக்கு தேமுதிகவுக்கு ஆரம்ப காலங்களில் வேலை செய்துள்ளேன். நீங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை. நமது ஒட்டுமொத்த எதிரியான திமுகவை வீழ்த்த நாம் தமிழருக்கு வாக்களியுங்கள்” என்று பேசினார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கடந்த 19, 20ஆம் தேதிகளில் விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டனர். இவர்களில் பலரது நிலைமை அடுத்தடுத்து கவலைக்கிடமானதில் நேற்று வரை 59 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில், இன்று காலை ஏசுதாஸ் என்பவரும், அவரைத் தொடர்ந்து ரஞ்சித்(37) என்பவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் நாவல் பழத்திற்கு உண்டென சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே குறைந்த ரத்தச் சர்க்கரை அளவு கொண்டவர்கள் தவறுதலாக கூட இந்த பழத்தை உட்கொள்ள வேண்டாம் என உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இருப்பினும், மழைக்காலத்தில் மட்டுமே கிடைக்கும் அதை சாப்பிடாமல் இருக்க முடியாது என நினைத்தால், குறைந்த அளவு எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்து மதத்துக்கு பொருந்தாத சாய்பாபா சிலைகளை அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. “சாய்பாபா கோயில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்றால் அது இந்து கோயில் அல்ல என்று அர்த்தம். அப்படியானால், இந்து கோயில்களுக்குள் சாய்பாபா சிலையை நிர்மானிக்கக்கூடாது” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வெளிமாநிலத்தில் பதிவு செய்த ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி கேட்டு சுரேஷ்குமார் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பித்ததோடு, இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்டு 12-க்கு ஒத்திவைத்தது.
Sorry, no posts matched your criteria.