India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ₹1000 குறைந்து ₹94,500ஆக விற்பனையாகிறது. கடந்த மாத இறுதியில் ₹1,02,200க்கு விற்கப்பட்ட வெள்ளி ஒரு மாதத்தில் சுமார் ₹8000 சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி இன்று ₹94.5ஆக உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹53,280க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,680க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று ₹20 குறைந்து ₹6,660க்கு விற்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில், சபாநாயகர் அப்பாவு நடுநிலையுடன் செயல்படவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மிக முக்கியமான விஷயம் என்பதால், இந்த விவகாரத்தை பேரவையில் உடனே விவாதிக்க வலியுறுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அப்பாவு அரசியல் பேசுவது நல்லதல்ல என்றார். மேலும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவும் அரசியல் பேசலாம் எனவும் இபிஎஸ் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக வீண் விளம்பரம் தேட முயற்சிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். தொடர்ந்து மூன்றாவது நாளாக அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட பின்னர் பேசிய முதல்வர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அக்கறையுடன் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்க, சபாநாயகர் அப்பாவு தடை விதித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை, விவாதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நடப்பு பேரவைக் கூட்டத்தொடர் முடியும் வரை அனைவரையும் சஸ்பெண்ட் செய்து அப்பாவு உத்தரவிட்டுள்ளார். இதே விவகாரத்தில் நேற்று ஒருநாள் மட்டும் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்டானது குறிப்பிடத்தக்கது.
கால்பந்தாட்ட திறமையைப் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர்
லயோனல் மெஸ்ஸி தன்னடக்கத்தோடு அளித்த பதில் வைரலாகியுள்ளது. கால்பந்து ஆடும் திறமையை கடவுள் தனக்குக் கொடுத்த பரிசாகவே கருதுவதாகக் கூறிய அவர், அதற்காகவே கடவுள் தன்னை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றார். அத்துடன், இந்த வரப்பிரசாதத்தை முழுமையாகப் பயன்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து அதிமுகவினரை வெளியேற்ற, சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தை, பேரவையில் விவாதிக்க அதிமுக எம்எல்ஏ.க்கள் கடந்த 3 நாள்களாக வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், இன்றும் சபாநாயகர் இருக்கையை சுற்றி நின்று அமளி செய்ததால், அவர்கள் அனைவரையும், அவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. இதே விவகாரத்தில் நேற்று அனைவரும் சஸ்பெண்ட் செய்யட்டனர்.
தமிழக சட்டபேரவை தொடங்கியதும் அதிமுகவினர் பேச அனுமதி கேட்டதால் கூச்சல் குழப்பம் நிலவுகிறது. கேள்வி நேரம் முடிந்தபின்னர் பேச அனுமதிப்பதாக சபாநாயகர் கூறியதை ஏற்காமல் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, அவையை நடத்தவிடாமல் அதிமுகவினர் தடுப்பதாகவும் விவாதத்தில் கலந்துகொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை என்றும் சபாநாயகர் குற்றஞ்சாட்டினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய, தமிழக தனிப்படை போலீசார் வடமாநிலங்களுக்கு விரைந்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில், பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் சொத்துகளை மிரட்டி வாங்கியதாக அவர் மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரிய மனுவை, கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது . விஷச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கும் 61 பேரில் 6 பெண்களும் அடங்குவர். ஆகையால், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்கும் மகளிர் ஆணையம், குழுவின் தலைவராக குஷ்புவை நியமித்திருக்கிறது.
சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நாளை ரிலீசாகிறது. பிரபாஸ், கமல், அமிதாப், தீபிகா படுகோனே என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்பட 6 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதில், சுப்ரீம் யாஸ்கின் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கமல்ஹாசன், 5 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.