India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாநில அரசுக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த அதிகாரமில்லை எனக் கூறி பிஹாரில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்ததாக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த தகவலை பாமக தலைவர் அன்புமணி மறுதலித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், உண்மையில் கணக்கெடுப்பில் இருந்து இடஒதுக்கீட்டில் தவறான தகவலை பிஹார் அரசு குறிப்பிட்டதால் அது ரத்து செய்யப்பட்டது என தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை முடிக்க அமர்வு நீதிமன்றத்துக்கு மேலும் 4 மாதங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க பிப்ரவரியில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் இன்று புதிய சபாநாயகரை வாழ்த்தி பேசினார். நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், காந்தி, அம்பேத்கர் சிலைகள் இடம் மாற்றப்பட்டது குறித்து பேசினார். அப்போது அவர் பேசிய மைக் அணைக்கப்பட்டதால் எதிர்க்கட்சியினர் கூச்சல் எழுப்பினர். ஆனாலும், விடாமல் தான் பேச வந்ததை பேசி முடித்துவிட்டு அமர்ந்தார் திருமாவளவன்.
இந்தியாவின் மொத்த ஸ்மார்ட்போன் உற்பத்தியில், 40% காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சர் TRB ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், அமெரிக்காவின் கார்னிங் நிறுவனத்துடன் ஆப்டிமஸ் இன்ப்ராகாம் நிறுவனம் இணைந்து போன் சாதனங்களுக்கான உயர்தர கண்ணாடி பாகங்கள் உற்பத்தி செய்யவுள்ளன. இதற்காக காஞ்சிபுரத்தில் ₹1,003 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதெனக் கூறினார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா இன்று தேர்வானார். இதைத் தொடர்ந்து அவையில் பேசிய அவர், இந்திரா காந்தி ஆட்சியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்திய ஜனநாயகத்தின் கருப்புப் பக்கம் எனப் பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் தொழிலதிபர் நிகோலாய் சச்தேவுக்கும் ஜூலை 2ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. தனது திருமணத்திற்கு சினிமா பிரபலங்களை நேரில் சந்தித்து சரத்குமார் குடும்பத்தினர் அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஹைதராபாத் சென்ற வரலட்சுமி, நடிகர் பாலகிருஷ்ணாவை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட அவர், வரலட்சுமியை வாழ்த்தியுள்ளார்.
தமிழகத்தில் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (27.06.24) நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக ஆதரவளித்துள்ளது. 2021க்கான மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய பாஜக பேரவைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், குளறுபடி இல்லாமல் தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிபிஐ கைது செய்தது. அப்போது, அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் நீதிமன்ற அறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். காவலர்கள் அவருக்கு டீயும் பிஸ்கெட்டும் கொடுத்து பெஞ்சில் அமர வைத்தனர்.
ஆஸ்கர் அகாடமியின் Motion picture of Arts and sciences குழுவில் உறுப்பினராக சேர ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 57 நாடுகள் உள்ள 487 திரைத்துறை பிரபலங்களுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பிதழ் அனுப்பி கௌரவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இயக்குநர் ராஜமௌலி, ஆடை வடிமைப்பாளர் ரமா, நடிகை ஷபனா ஆஸ்மி உள்ளிட்ட இந்திய திரையுலக நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.