news

News June 26, 2024

NEET தேர்வுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்

image

NEET மற்றும் NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

News June 26, 2024

ஹமாஸ் ஆட்சியை மாற்ற இஸ்ரேல் திட்டம்!

image

வடக்கு காசாவில் அதிகாரம் செலுத்தும் ஹமாஸ் நிர்வாகத்தை மாற்றும் திட்டத்தை, ஜெருசலேம் விரைவில் வெளியிடும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு ஆலோசகர் சாஹி ஹனெக்பி அறிவித்துள்ளார். ஹமாஸின் சரிவு, ஆபிரகாம் அமைதி ஒப்பந்தத்தை ஏற்கும் காசாவின் புதிய தலைமைக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறிய அவர், மத்திய பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த விரும்பும் மேற்குலக நாடுகளும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

News June 26, 2024

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு பரிசீலனை

image

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பேசிய அவர், “சாத்தியக் கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட குழு ஓய்வூதிய ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். எனக் கூறிய அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இந்த தகவலை அமைச்சர் கூறியுள்ளார்.

News June 26, 2024

‘இ-ருபி’ என்றால் என்ன?

image

இந்தியாவில் பணத்தின் புழக்கத்தை குறைக்கும் நோக்கில் இ-ருபி ((e₹) என்ற டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி 2022 ஆம் ஆண்டு டிச.,1ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. வணிகம் (e₹-W) & நுகர்வோர் பரிவர்த்தனைகளுக்கு (e₹-R) என இருவகை டிஜிட்டல் நாணயங்களாக இவை சோதனை முறையில் பயன்பாட்டுக்கு வந்தன. தடை செய்யப்பட்ட கிரிப்டோகரன்சிகளுக்கு மாற்றாக ‘இ-ருபி’யை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

News June 26, 2024

சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு

image

சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். 2021ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தக் கோரி பேரவையில் இன்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு தொடர்பாக பேச கோரிக்கை விடுத்தும், அதற்கு அனுமதிக்கவில்லை எனக் கூறி பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

News June 26, 2024

வந்தே பாரத் ரயில்களின் வேகம் விரைவில் குறைப்பு

image

வந்தே பாரத், கதிமான் ரயில்களின் வேகத்தை விரைவில் குறைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. சமீப நாள்களாக பயணிகள் ரயில்கள் சந்திக்கும் விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு, ரயிலின் வேகமும் ஒரு காரணம் எனக் கூறப்படும் நிலையில், குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட, வந்தே பாரத், கதிமான் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News June 26, 2024

கே.பி.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

image

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சட்டப்பேரவை வளாகத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மருத்துவக்குழுவினர் முதலுதவி அளித்தனர். பின்னர், அவர்களது பரிந்துரையின் பேரில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News June 26, 2024

T20 தரவரிசையில் முதலிடம் பிடித்த ஹெட்

image

ICC வெளியிட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான T20 தரவரிசைப் பட்டியலில், ஆஸி., வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடம் பிடித்துள்ளார். T20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், இந்தியாவுடனான சூப்பர்-8 சுற்றின் கடைசிப் போட்டியில் 76 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 844 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், ஃபில் சால்ட் ஆகியோர் 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளனர்.

News June 26, 2024

24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்: தங்கம் தென்னரசு

image

தமிழகம் முழுவதும், 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அவர், மே 2ஆம் தேதி தமிழகத்தின் மின்தேவை 20,830 மெகா வாட் என்ற புதிய உச்சம் எட்டியதாகக் கூறியுள்ளார். இதேபோல, மே 31ஆம் தேதி சென்னையில் 4,769 மெகா வாட் என்ற அதிகபட்ச மின் தேவை இருந்ததாகவும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

News June 26, 2024

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை 62ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 62ஆக அதிகரித்துள்ளது. கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 19, 20ஆம் தேதிகளில் விஷச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டனர். பலரது நிலைமை அடுத்தடுத்து கவலைக்கிடமானதில் இன்று காலை வரை 61 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமநாதன் (62) தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!