news

News June 26, 2024

தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

image

தமிழ்நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் 2003ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது, அவரது சம்பளத்திலிருந்து 10%, அரசு பங்களிப்பாக 10%, மேலும் இந்தத் தொகைகளுக்கான வட்டி 7-8% என ஓய்வூதிய தொகையாகச் சேகரிக்கப்படும். ஊழியர் ஓய்வு பெறும்போது, இந்தத் தொகை அப்படியே திருப்பித் தரப்படும். தமிழ்நாட்டில் உள்ள இத்திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

News June 26, 2024

விஜய் பரிசு வழங்கும் விழாவில் கட்டுப்பாடு

image

10, 12ஆம் வகுப்பு தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் பரிசு வழங்கும் விழா, இரு கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில், விழாவில் பங்கேற்க தவெக சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடன், பெற்றோர், உடன் பிறந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், அலைபேசி எடுத்து வர தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 26, 2024

செல்வப்பெருந்தகை மீது அண்ணாமலை கடும் தாக்கு

image

நான்கு கட்சிகள் மாறிய செல்வப்பெருந்தகைக்கு காங்., கட்சியின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். இறுதி வரை இந்திரா காந்தியை காமராஜர் ஏற்கவில்லை எனக்கூறிய அவர், காங்., கட்சி வசதிக்காக அரசியல் சாசனத்தை மாற்றி இருக்கலாம், வரலாற்றை மாற்ற முடியாது. 3 தேர்தலில் இரட்டை இலக்கத்தை தாண்டாத ஒரு கட்சிக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.

News June 26, 2024

ரேவண்ணாவின் ஜாமின் மனு தள்ளுபடி

image

பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் MP பிரஜ்வால் ரேவண்ணாவின் முன்ஜாமின் மனுவை MP, MLA,களுக்கான சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குற்றத்தின் தீவிரத்தை கருதி ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறிய நீதிமன்றம், ரேவண்ணா மீதான 4 பாலியல் வன்கொடுமை வழக்கிலும் ஜாமின் மறுத்துள்ளது. வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த ரேவண்ணா, மே 31ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News June 26, 2024

‘தெறி’ ஹிந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. இப்படத்தை தனது ‘ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனம் மூலம் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் இந்தியில் தயாரித்து வருகிறார் அட்லீ. காலிஸ் என்பவர் இயக்கும் இப்படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கோபி ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், டிச. 25ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 26, 2024

நேரு குடும்பத்தில் இருந்து தேர்வான மூன்றாவது நபர்

image

INDIA கூட்டணி கட்சி மக்களவைக் குழு தலைவர்கள் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, நேரு குடும்பத்திலிருந்து எதிர்கட்சித் தலைவரான மூன்றாவது நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக, ராஜீவ் காந்தி (18 டிசம்பர் 1989 – 23 டிசம்பர் 1990), சோனியா காந்தி (31 டிசம்பர் 1999 – 6 பிப்ரவரி 2004) எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்துள்ளனர்.

News June 26, 2024

இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் நீலகிரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், தென்காசி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 26, 2024

4ஆவது முறையாக மக்களவை சபாநாயகர் தேர்தல்

image

சுதந்திர இந்தியா வரலாற்றில், மக்களவை சபாநாயகர் பதவிக்கு 3 முறை (1952, 1967, 1976) தேர்தல்கள் நடந்துள்ளன. இதன்பிறகு, தற்போது 4ஆவது முறையாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. சபாநாயகர் தேர்வு விவகாரத்தில், ஆளும் கட்சி – எதிர்க்கட்சி இடையே ஒருமித்த கருத்தே இருந்தது. இந்த முறை, துணை சபாநாயகர் பதவியை காங்., கோரிய நிலையில், பாஜக வாய் திறக்காததால், சபாநாயகர் தேர்தலில் கொடிக்குன்னில் சுரேஷை காங்., களமிறக்கியது.

News June 26, 2024

சொர்க்கத்தில் நிலம் வாங்க விருப்பமா?: வைரல் போஸ்டர்

image

போர்ச்சுக்கல்லில் உள்ள தேவாலயம், சொர்க்கத்தில் உள்ள நிலங்களை சதுர மீட்டர் $100க்கு விற்கத் தொடங்கியுள்ளது. அந்த தேவாலயத்தை சேர்ந்த போதகர் 2017ஆம் ஆண்டு கடவுளை சந்தித்து பேசியதாகவும், அப்போது நிலங்களை விற்க அவரிடம் ஒப்புதல் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இஎம்ஐ அம்சத்தோடு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஜிபே ஆகிய வசதிகளோடு வாங்கலாம் என அறிவித்துள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

News June 26, 2024

பாமகவுக்கு மாம்பழம், நாதகவுக்கு மைக் ஒதுக்கீடு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், யாரும் வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. மொத்தம் 35 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில், திமுகவுக்கு உதய சூரியன் சின்னமும், பாமகவுக்கு மாம்பழ சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!