India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போக்சோ வழக்கில் இருந்து அதிமுக முன்னால் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 2015ல் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, சிறுமியின் புகாரின் பேரில் நாஞ்சில் முருகேசன் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கில் பிறழ் சாட்சியங்கள் இருப்பதால் நாஞ்சில் முருகேசனை விடுதலை செய்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சோதனை முறையில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய ‘இ-ருபி’யின் பயன்பாடு தற்போது சரியத் தொடங்கியுள்ளது. 2023 டிசம்பரில் நாளொன்றுக்கு, 10 லட்சம் பணப்பரிமாற்றங்கள் நடைபெற்ற நிலையில், தற்போது இதன் பயன்பாடு ஒரு லட்சம் பரிமாற்றங்களாக 9 மடங்கு குறைந்துள்ளது. இ-ருபி பயன்படுத்தி வந்த சில்லறை வர்த்தகர்களுக்கு, வங்கிகள் வழங்கிய ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டதே இதற்கு காரணமென வல்லுநர்கள் கூறுகின்றனர்
தமிழ்நாட்டில் பல வழக்குகள் சிபிஐ விசாரணையில் நிலுவையில் இருப்பதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில், அதிமுக சிபிஐ விசாரணை கோருவது குறித்து பேட்டியளித்த அவர், இபிஎஸ்ஸுக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இபிஎஸ் தான் ஒரு உத்தமன் போல தவறான தகவலை பரப்புவதாக அவர் சாடியுள்ளார்.
காலநிலை மாற்றத்தால், பலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது அவசியமாகிறது. குறிப்பாக, சிட்ரஸ் பழங்களான சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய பழங்களையும், உருளைக்கிழங்கு, குடை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளையும் அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
2008ஆம் ஆண்டு சட்டப்படி, சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாதா? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது என அவையில் முதல்வர் கூறியது அப்பட்டமான பொய் என விமர்சித்த அவர், சமூக நீதியை தடுக்க சட்டமன்றத்தில் முதல்வரே பொய் கூறக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தினால் முழுமையாக இருக்காது, மாநில அரசே நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் இணைந்து நடிக்க வந்த வாய்ப்பை சிவகார்த்திகேயன் மறுத்ததாக வெளியான தகவல் வைரலாகி வருகிறது. ‘இந்தியன் 2’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனிடையே, சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சிவகார்த்திகேயனை படக்குழு அணுகியதாகவும், ஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக இப்படத்தில் நடிக்க அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன், கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சன்னரக நெல் குவிண்டாலுக்கு ₹140, சாதாரண நெல் குவிண்டாலுக்கு₹105 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், விவசாயிகளிடம் இருந்து சாதாரண நெல் குவிண்டாலுக்கு ₹2,405, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ₹2,500க்கு கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு செப்.1 முதல் அமலுக்கு வருகிறது.
உலகளவில் உடல் அசைவில்லாத வாழ்க்கை முறை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகளவில் 31% பேர் உடல் ரீதியாக அசைவில்லாத வாழ்க்கை முறையை கொண்டிருப்பதாகவும், இது உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் இது 49.4%ஆக உள்ளது. அதே நேரம், பூட்டான் மற்றும் நேபாளம் முறையே 9.9%, 8.2% பேர் உடல் அசைவில்லாத வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர்.
₹3 கோடி நிதியை எம்.எல்.ஏக்கள் தொகுதி வளர்ச்சிக்கு செலவு செய்வதில் இருந்த கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியுள்ளது. ₹2 கோடி மட்டுமே எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் விருப்பப்படியும், ஒரு கோடி ரூபாயை அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தவும் முன்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த விதியை தளர்த்தி, ₹3 கோடி நிதியையும் நேரடியாக தொகுதிக்கு செலவிட அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 63 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 47 பேர், சேலம் மருத்துவமனையில் 29 பேர் என மொத்தம் 88 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களும் விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவார்கள் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.