India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் காலத்தில் 10.5% இடஒதுக்கீடு பற்றி பேசி பாமக ஏமாற்றுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகளை பொதுவெளியில் அன்புமணி பரப்ப வேண்டாம் எனக் கூறிய அவர், அனைத்து மக்களுக்குமான இடஒதுக்கீடு அமைய சரியான வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.
எழில் இயக்கத்தில், 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. விமல், பிந்து மாதவி, சூரி, சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், காமெடி ஜானரில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் 2ஆம் பாகம் 11 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகி வருகிறது. அந்த வகையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரியும் நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
T20 WC தொடருக்குப் பின் இந்திய அணி ஜிம்பாப்வே அணியுடன் 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த நிதிஷ் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணி விவரம்: கில்(C), ஜெய்ஸ்வால், கெய்க்வாட், அபிஷேக், ரிங்கு, சஞ்சு, ஜூரல்(WK), பராக், துபே, சுந்தர், பிஷ்னோய், அவேஷ் கான், கலீல், முகேஷ், தேஷ்பாண்டே.
ஸ்ரீபெரும்புதூரில் செயல்படும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதியில்லை என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் இதுதொடர்பாக, “உண்மை நிலை அறிக்கை வழங்கும்படி” தமிழக தொழிலாளர் நலத்துறையிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. திருமணமான பெண்களுக்கு வீட்டு பொறுப்பின் காரணமாக அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேலை மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில், தன்னை குறித்து தவறான தகவலை பரப்பியதற்காக 3 நாளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், ஒரு கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரத்திக்கு அண்ணாமலை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், நஷ்ட ஈடாக பெறப்படும் ஒரு கோடியில், கருணாபுரத்தில் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முதல் தளமும், 2ஆவது தளமும் நடப்பு ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று தெரிவித்துள்ள கோயில் நிர்வாகம், தினசரி ஒரு லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதாகவும், கோயில் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 1.75 கோடிக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் பேர் மது அருந்துவதால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், ஆல்கஹாலால் தூண்டப்பட்ட வன்முறை, நோய்களின் பாதிப்பு போன்ற காரணிகள் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவால் இறப்பவர்களில் 75% பேர் ஆண்களாகவும், 20 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 62 பேர் உயிரிழந்ததையடுத்து கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண் சாராய வியாபாரி சாமுண்டியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது வீட்டின் பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110லி கள்ளச்சாராயத்தை கொட்டி அழித்த போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அனைத்துக் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் போல் சபாநாயகர் செயல்படுவதாகவும், சட்டப்பேரவையில் விவாதம் நடத்தவே திமுக பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் தேர்தலை புறக்கணித்தால்தான் தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ளும் என்றார்.
Sorry, no posts matched your criteria.