India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 1 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை, அறந்தாங்கி அருகே ராமசாமிபுரம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் தேரின் கலசம் தவறி விழுந்து தேர் சாய்ந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
*இரவு 9 மணிக்கு மேல் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். *சாக்லேட்டில் சாக்ரின், காஃபின், சர்க்கரை, கொழுப்புச்சத்து போன்றவை உள்ளதால், ஜீரண கோளாறை ஏற்படுத்தும். *இறைச்சியில் அதிக அளவிலான புரதமும், கொழுப்புச்சத்தும் இருப்பதால், செரிமானக் கோளாறு ஏற்படும். *இரவில் டீ, காபி பருகினால் தூக்கமின்மை பிரச்னை ஏற்படும். *குளிர்பானங்கள் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில், அவரது உறவினர் மகேஷ் என்பவருக்கு ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தன்னை மிரட்டி தனது நிலத்தை அபகரித்ததாக ஜெயக்குமார் மீது மகேஷ் புகாரளித்திருந்தார். இதில், தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ஜெயக்குமார் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 583 நாள்களாக மகேஷ் பதிலளிக்காததால் தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசமைப்பு சட்டம் 246இன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. இதனால், மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு, கிடைக்கப்பெறும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மாநில அரசுகள் மேற்கொள்ளும் பணிகளுக்குத்தான் சட்ட பாதுகாப்பு இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மாநில அரசின் கணக்கெடுப்பை நீதிமன்றம் ரத்து செய்யும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in -இல் மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறியலாம். மேலும், இந்தப் பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இருக்காது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘கருடன்’. இப்படத்தில் சூரியின் வித்தியாசமான நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. வசூலிலும் சாதனை படைத்த இப்படம் இம்மாதமே ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், தியேட்டரில் கூட்டம் குறையாததால் அடுத்த மாதம் (ஜூலை) 7ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு மநீம தலைவர் கமல்ஹாசன், தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். தனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு விஜய் மற்றும் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல், நமது இந்தியாவின் குரல் ஒலிக்கும் போது நமது ஜனநாயகம் வலுப்பெறும் எனக் கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையைக் கொண்டாடவும் பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.
சுமார் 7,200 அடி நீளம் கொண்ட ராட்சத விண்கல் பூமியை நோக்கி வந்துக் கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. புர்ஜ் கலிஃபா கட்டடத்தை விட 2.65 மடங்கு உயரம் கொண்ட இந்த விண்கல், சுமார் 93,176 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வருகிறது. இந்த விண்கல், நாளை 41.30 லட்சம் மைல்கள் தொலைவில் பூமியை கடந்து செல்லும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, அதன் பாதை விலகினால் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ம.பி.,யில் பாஜகவுக்கு ஓட்டு போட்டதால், தன்னை தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தனது கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும், மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டுப்போட்டதால், என் கணவர் தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாகவும் அப்பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.