news

News June 27, 2024

ரயிலில் Middle Berth விழுந்ததில் உயிரிழப்பு

image

ஆக்ரா செல்லும் ரயிலில் sleeper coach-ல் பயணித்த கேரளாவைச் சேர்ந்த அலிகான் (60) மீது, Middle Berth விழுந்ததால் உயிரிழந்துள்ளார். கடந்த 16ஆம் தேதி lower berth-ல் படுத்திருந்த போது, சங்கிலியால் சரியாக பிணைக்கப்படாமல் இருந்த Middle Berth படுக்கை கீழே விழுந்ததில் அவருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News June 27, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஜூன்- 27 | ▶ஆனி – 13 ▶கிழமை: வியாழன் | ▶திதி: சஷ்டி ▶நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 வரை ▶கெளரி நேரம்: பிற்பகல் 12:15 – 01:15 வரை, மாலை 06:30 – 07:30 வரை ▶ராகு காலம்: பிற்பகல் 01:30 – 03:00 வரை ▶எமகண்டம்: காலை 06:00 – 07:30 வரை ▶குளிகை: காலை 09:30 – 10:30 வரை ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம் ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்

News June 27, 2024

வீரர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு

image

பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத்தொகையை இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிகரித்துள்ளது. அதன்படி, தங்கம் வென்றால் ₹1 கோடி, வெள்ளிக்கு ₹75 லட்சம், வெண்கல பதக்கத்திற்கு ₹50 லட்சம் வழங்கப்பட உள்ளது. ஹாக்கி போட்டியில் தங்கம் வென்றால் ₹2 கோடியும், வெள்ளி பதக்கத்திற்கு ₹1 கோடியும், வெண்கலத்திற்கு ₹75 லட்சமும் வழங்கப்பட உள்ளது.

News June 27, 2024

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு கிராமிய வங்கிகளில் காலியாக உள்ள 9,995 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பணியின் தன்மையைப் பொறுத்து வயதில் மாற்றம் இருக்கும். இதற்கு www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என வங்கி பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

News June 27, 2024

இந்தியன் -2 கதையை முன்பே பேசியிருக்கிறோம்: அட்லி

image

‘இந்தியன் – 2’ திரைப்படம் இந்திய சினிமாவிற்கு நிச்சயம் பெருமை சேர்க்கும் என இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் உதவியாளராக இருந்தபோதே, இப்படத்தின் கதை குறித்து இருவரும் பேசி இருப்பதாகவும், கமல்ஹாசனுடன் பணியாற்ற வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கமல் படங்களை பார்த்து கற்றுக் கொண்டுதான் தான் சினிமாவிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

News June 27, 2024

நாஜி பாட்டிக்கு மீண்டும் சிறை

image

யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் படுகொலையை மறுத்ததற்காக, ஜெர்மனியில் உர்சுலா ஹேவர்பேக் (95) என்ற பாட்டிக்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாஜி பாட்டி என்று அழைக்கப்படும் உர்சுலாவிற்கு, படுகொலைக்கு ஆதரவாக பல இடங்களில் பேசியதற்காக, இதற்கு முன்பும் பலமுறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008ல் மூடப்பட்ட நாஜிக்களின் கருத்தியலை பரப்பும் பயிற்சி மையத்தின் தலைவராகவும் அவர் செயல்பட்டுள்ளார்.

News June 27, 2024

பாப் மார்லியின் பொன்மொழிகள்

image

✍உண்மையான நண்பர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள், உங்களைச் சுற்றி இருட்டாக இருக்கும்போது மட்டுமே அவர்களை அடையாளம் காண முடியும். ✍மன அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள், நம்மைத் தவிர வேறு யாராலும் நம் மனதை விடுவிக்க முடியாது. ✍உங்கள் வாழ்க்கை முழுவதும் கைதியாக இருப்பதை விட, சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது மேலானது. ✍ஒரு தீர்வை உருவாக்க, ஒரு புரட்சி தேவைப்படுகிறது.

News June 27, 2024

இந்தியா ஒரு வித்தியாசமான அணி: ENG பயிற்சியாளர்

image

கடந்த 2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில், இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. இந்த நிலையில் கடந்த காலத்தை பற்றி தாங்கள் நினைக்கவில்லை என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மேத்திவ் மோட் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு வித்தியாசமான அணி என்றும், விராட் கோலி களத்தில் இருந்தால் எவ்வளவு ஆபத்தானவர் என்பதை தாங்கள் உணர்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

அத்வானிக்கு திடீர் உடல்நலக் குறைவு

image

முன்னாள் துணைப்பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு (96) திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை குடியரசு தலைவர் அவருக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

News June 27, 2024

ஃபோனை அடிக்கடி சார்ஜ் செய்கிறீர்களா?

image

ஸ்மார்ட்ஃபோனின் பேட்டரி ஆரோக்கியத்துடன் இருக்க, 20%க்கு கீழ் சார்ஜ் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைக்கின்றன. அதேபோல், 20% சார்ஜில் இணைத்து, 90% வரை சார்ஜ் செய்வது பேட்டரியை நீண்ட காலம் பழுதாகாமல் பராமரிக்க உதவும் என கூறப்படுகிறது. பேட்டரி 0%இல் இருக்கும் போது, ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால், ஃபோன் சூடாகும் வாய்ப்பு அதிகம்.

error: Content is protected !!