India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
T20WC தொடரின் ஆச்சரியம் ஆஃப்கானிஸ்தான் அணிதான். லீக் போட்டிகளிலேயே வெளியேறும் என்று நினைத்த அணி, அரையிறுதி வரை முன்னேறி கொடி நாட்டியிருக்கிறது. உள்நாட்டு பிரச்னைகள் பல இருந்தாலும் சர்வதேச அளவில் தங்களது நாட்டை ரஷித் கான் தலைமையிலான வீரர்கள் பெருமைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஜாம்பவான் ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்டது நீங்கா நினைவாக மாறியுள்ளது. நிமிர்ந்த தலையுடன் செல்லுங்கள் வீரர்களே.
மகாபாரதத்தில் இருந்து நவீன கலியுகத்தின் 5 ஆயிரம் ஆண்டு கால தொன்மவியல் சமூகத்தின் கதைக்களத்தில் பயணிக்கிறது ‘கல்கி 2898 AD’ படம். கல்கி அவதாரத்தை சுற்றிய புனைவு பிறழ் ஜெனரில் அதிரடி த்ரில்லராக படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். முதல் பாதி பாலைவனம், தலைகீழ்-பிரமிடு என பிரமாண்டத்திற்கும், 2ஆம் பாதி கதைக்கும் களம் அமைத்து கொடுத்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களை நெகிழ வைப்பதாக கூறுகின்றனர்.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 தொடர் வெற்றிகளை பெற்று தென் ஆப்பிரிக்கா புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இதேபோல 8 தொடர் வெற்றிகளை பெற்றிருந்தது. 2012ஆம் ஆண்டு இந்தியா 7 போட்டிகளிலும் 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து 7 போட்டிகளிலும் தொடர் வெற்றிகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக் கோரி அதிமுக சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு 23 நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது. அதில், போராட்டம் அமைதியான முறையில் நடக்க வேண்டும், போராட்டம் நடத்தும் இடத்திற்கு வாகனங்களை கொண்டு வரக்கூடாது, அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட நபர்களை தாக்கி பேசக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக வலுவான அணியாக திகழும் தென் ஆப்பிரிக்கா இப்போதுதான் முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம்தான். ஆனால், அதுதான் நிஜம். தென் ஆப்பிரிக்காவுக்கு அரையிறுதியில் ராசியே இல்லை என்று பல சொல்லி கேட்டிருப்போம். அந்த கூற்றை பொய்யாக்கி நடப்பு உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியை எட்டியிருக்கிறது தெ.ஆ. அணி. வாழ்த்துகள்.
கீழடி கொந்தகையில் ‘தா’ என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட உடைந்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 4 செ.மீ., அகலமும், 4 செ.மீ., உயரமும் கொண்டுள்ள அந்த பானை ஓட்டில், 2ஆம் எழுத்து இருப்பதற்கான தடயமும் இருக்கலாமெனக் கூறப்படுகிறது. அகழாய்வு பணிகள் நடைபெறுவதால், பாசி, கண்ணாடி மணிகளைத் தொடர்ந்து மேலும் பல அரிய பொருள்கள் கிடைக்கக்கூடும் என்று தொல்லியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி உப்புச் சப்பில்லாமல் முடிந்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி வெறும் 56 ரன்களில் சுருண்டதால் தென் ஆப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இதன்மூலம் முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. அந்த அணியின் ஹெண்ட்ரிக்ஸ் அதிகபட்சமாக 29* ரன்கள் எடுத்தார்.
அதிவேக இணைய சேவைகளுக்கான 10ஆவது அலைக்கற்றை ஏலத்தில் தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததால் வெறும் ₹11,300 கோடிக்கு (12%) மட்டுமே ஏலம் போயுள்ளது. 8 பேன்ட்களில் (10.5 ஜிகா ஹெர்ட்ஸ்) ₹96,238 கோடி மதிப்புள்ள 5ஜி அலைக்கற்றையை தொலைதொடர்பு துறை ஏலம்விட்டது. முதல் நாளில் ₹11,000 கோடிக்கும், 2ஆம் நாளில் வெறும் ₹300 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. மொத்தத்தில் ஏர்டெல் ₹6,857 கோடிக்கு ஏலம் பெற்றுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, உலகில் ஜனநாயகத்துக்கு ஒளிரும் முன்னுதாரணமாக இந்தியா விளங்குவதாக கூறிய அவர், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாக பேசியது சர்ச்சையானது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் வெடித்த இந்த சர்ச்சையால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்மு உரை நிகழ்த்தவுள்ளார். தேர்தலுக்குப் பின் நடக்கும் முதலாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்குவது நாடாளுமன்ற மரபு. அந்த வகையில், இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் இன்று நடக்கிறது. இதில் புதிதாக பதவியேற்றுள்ள NDA கூட்டணியின் மோடி 3.0 மத்திய அரசின் முன்னுரிமை திட்டங்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.