India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மின்வாகன உற்பத்தியில் ஓசூர் வளர்ந்து வருவதன் காரணமாக அங்கு பன்னாட்டு விமான நிலையம் அமைக்க உள்ளதாக கூறிய அவர், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் அந்த விமான நிலையம் அமையும் என்றும், தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணியுடனான தோல்வி, இன்றைய நாளை மிகவும் கடினமாக மாற்றியுள்ளதாக ஆஃப்கன் அணியின் கேப்டன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் இதைவிட சிறப்பான ஆட்டத்தை எங்களால் வெளிப்படுத்தியிருக்க முடியும் என்ற அவர், தென்னாப்பிரிக்க பவுலர்களின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டினார். இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் 56 ரன்னில் ஆஃப்கன் அணி சுருண்டது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெல்ட் அணிய அனுமதிக்குமாறு நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறை அதிகாரிகள் தனது பெல்ட்டை எடுத்துக்கொண்டதால், பேன்ட்டை கையால் பிடித்து நடக்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்த அவர், இந்த தர்மசங்கடத்தை புரிந்துகொண்டு விதியில் தளர்வளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்ற, நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினர் வாக்களிக்க மாட்டார்கள் என அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த அதிமுக, தற்போது அதிமுகவினர் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் தேர்தலை முற்றிலும் புறக்கணிப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, சீமான் அதிமுகவினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
கடந்த சில நாள்களாக விலை உயர்ந்து காணப்பட்ட தங்கம், இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 குறைந்து ₹53,000க்கும், கிராமுக்கு ₹35 குறைந்து ₹6,625க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் ₹94.50க்கும், கிலோ 94,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கமுள்ளதாக ‘அவன் இவன்’ பட நடிகை ஜனனி தனது ஆதங்கத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். ஒரு நடிகையாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாகக் கூறிய அவர், அதே நேரத்தில் முகம் சுழிக்க வைக்கும் ஆபாசமான வேடங்களில் ஒருபோதும் நடிக்க விருப்பமில்லை என்றார். தற்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக புதிய படமொன்றில் நடித்து வருவதாகத் தெரிவித்தார்.
சாலையின் தரம் மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். 3ஆவது முறையாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில், குண்டும் குழியுமாக சாலைகளை வைத்துக்கொண்டு சுங்கக் கட்டணம் வசூலித்தால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் அறிவுறுத்தினார்.
தமிழக எம்.எல்.ஏக்கள் தங்களது கோரிக்கைகளை சட்டசபையில் எழுப்புவதுடன் நிறுத்திவிடக்கூடாது என்று அவை முன்னவர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். அவ்வப்போது கோரிக்கை குறித்த அப்டேட்களை அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் அப்போதுதான் திட்டம் நிறைவேறும் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 AD’ திரைப்படம் வெளிநாடுகளில் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். சில நிமிடங்களே திரையில் தோன்றினாலும், அவரது காட்சிகள் ரசிக்க வைக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளதாக சிலரும், அவர் நடிப்பு மிகையாக இருப்பதாக சிலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வருகிறது. இதையொட்டி, 5.65 லட்சம் போலீசார், நீதிபதிகளுக்கு மத்திய அரசு பயிற்சி அளிக்கிறது. IPC, CRPCக்கு மாற்றாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய ஆதிநியம், பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டங்கள் அறிமுகமாகிறது. இதன் மூலம் காவல் நிலையம் நேரில் செல்லாமல் ஆன்லைனில் புகாரளிக்கலாம், எந்த காவல் நிலையத்திலும் FIR பதிவு செய்யலாம்.
Sorry, no posts matched your criteria.