news

News June 27, 2024

காய்கறிகளின் விலை குறைவு

image

வரத்து அதிகரித்ததன் காரணமாக காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம், பீட்ரூட் கிலோ ₹50க்கும் குறைவாக விற்கப்படுகிறது. கடந்த வாரம் கிலோ ₹180 வரை விற்பனையான பீன்ஸ் இன்று ₹90க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் கிலோ 120க்கு விற்கப்பட்ட அவரைக்காய், இன்று ₹90க்கு விற்கப்படுகிறது. விலை குறைந்ததால், பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

News June 27, 2024

நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டும் பாஜக: உதயநிதி

image

கேலோ இந்தியா போட்டிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதாக அமைச்சர் உதயநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். ம.பி.,க்கு ₹25 கோடி வழங்கிய மத்திய அரசு, தமிழகத்திற்கு ₹10 கோடி மட்டுமே வழங்கியுள்ளதாக விமர்சித்த அவர், கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் அனைவருக்கும் ஒரே மாதத்தில் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் மாலை 4 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை, தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News June 27, 2024

வரலாற்று சாதனை படைத்த ஆஃப்கன் வீரர்

image

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒருதொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையைப் ஆஃப்கனின் ஃபசல்ஹக் ஃபரூக்கி படைத்துள்ளார். இன்று குயின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் (17 விக்கெட்) எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 2ஆவது இடத்தில் வனிந்து ஹசரங்க (16 விக்கெட்), 3ஆவது இடத்தில் அஜந்தா மெண்டிஸ் (15) உள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 27, 2024

தீமைகளுக்கு திமுகதான் காரணம்: ராமதாஸ்

image

மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சாராயத்தை அறியாமல் இருந்த ஒரு தலைமுறைக்கு 1972 ஆம் ஆண்டு அதனை அறிமுகம் செய்துவைத்ததே திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும்தான் என விமர்சித்த அவர், அதற்கு பரிகாரமாக முழு மதுவிலக்கை முதல்வர் ஸ்டாலினின் அரசு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News June 27, 2024

புதிய சாதனை படைத்த அன்ரிச் நோர்ட்ஜே

image

டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய SA வீரர் என்ற சாதனையை அன்ரிச் நோர்ட்ஜே (13 விக்கெட்) படைத்துள்ளார். ஆஃப்கன் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 2 விக்கெட்டை எடுத்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும், இம்ரான் தாஹிர் (12 விக்கெட்), காகிசோ ரபாடா (12 விக்கெட்), சி லாங்கேவெல்ட் (11 விக்கெட்), தப்ரைஸ் ஷம்சி (11 விக்கெட்) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News June 27, 2024

போலீஸ் காவலில் மேக்கப் போட்ட நடிகை

image

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கன்னட நடிகை பவித்ரா கவுடா, போலீஸ் காவலில் மேக்கப் போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரேணுகாசாமி கொலை வழக்கு தொடர்பாக அவரிடமிருந்து கூடுதல் தகவல்களைப் பெற பெங்களூருவில் உள்ள வீட்டிற்கு பவித்ரா அண்மையில் போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணை முடித்து வீட்டை விட்டு வெளியேவந்தபோது, லிப்ஸ்டிக் போட்ட முகத்தோடு சிரித்துக்கொண்டே வந்தது பேசுபொருளாகியுள்ளது.

News June 27, 2024

நீலகிரி, கோவையில் கனமழை கொட்டும்

image

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, கோவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என, மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

News June 27, 2024

கட்சி உத்தரவை மீறிய சுவாதி மாலிவால்

image

கட்சி உத்தரவை மீறி சுவாதி மாலிவால் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கெஜ்ரிவால் கைதை கண்டித்து நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தை ஆம் ஆத்மி எம்பிக்கள் இன்று புறக்கணித்து, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், கட்சியின் உத்தரவை மீறி சுவாதி மாலிவால் அவை நடவடிக்கைகளில் கலந்துகொண்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 27, 2024

தேசிய தேர்வு முகமையில் ஊழியர்கள் பற்றாக்குறை

image

தேசிய தேர்வு முகமையில் (என்டிஏ) ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக தமிழ்நாடு, புதுவை, ஒடிசா காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பேசிய அவர், ஆண்டுக்கு 25 தேர்வுகளை நடத்தும் என்டிஏ.வில் 25 நிரந்தர ஊழியர்கள் கூட இல்லை என விமர்சித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் நடவடிக்கைகளில் என்டிஏ ஈடுபட கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!