India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒரு நபர் உள்ள குடும்பத்திற்கும், 10 நபர்கள் உள்ள குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசிதான் வழங்கப்படுகிறது என சீமான் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள TN Fact Check அமைப்பு, ஒரு நபர் உள்ள குடும்ப அட்டைக்கு 12 கிலோ, 4 நபர்கள் உள்ள குடும்ப அட்டைக்கு 20 கிலோ மற்றும் 5க்கும் மேல் நபர்கள் இருப்பின் ஒருவருக்கு 5 கிலோ வீதம் வழங்கப்படுவதாக விளக்கமளித்துள்ளது.
கோவை மாவட்டம் வடக்கலூர் கிராமத்தில், காதல் திருமணம் செய்வோரை கிராமத்தில் இருக்கும் பட்டியலின தலைவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக புகார் எழுந்துள்ளது. காதல் திருமணம் செய்தவர்களை, அதை குற்றமாக கருதி, குற்ற வரி செலுத்தவும் வற்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஊடகங்களுக்கு உறுதியளித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய மருத்துவக் காப்பீடு திட்டமாக அறியப்படுவது, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் PMJAY திட்டம்தான். இந்த திட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 70 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் இலவச மருத்துவம் அளிக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது உரையில் அறிவித்துள்ளார்.
₹100 கோடி மதிப்பீட்டில் திறன் தமிழ்நாடு நிறைப் பள்ளிகள் ( TN Skills-Finishing Schools) திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்லூரி பட்டப்படிப்பை முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்காக தொடங்கப்படும் இத்திட்டத்தில், சிறந்த தொழில் நிறுவனங்கள் மூலம் மானியத்துடன் திறன் ஓலைகள் (Skill Vouchers), பணியிடப் பயிற்சி (Internship), திறன் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
வெற்றிக்கு கேப்டன் மட்டுமே காரணமாக இருக்க முடியாது என தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார். அணியின் வெற்றி எங்களின் குழு முயற்சிக்கு கிடைத்த பரிசு என்று தெரிவித்த அவர், இந்த வெற்றி அணியில் விளையாடியவர்கள் மற்றும் வெளியில் இருந்து உதவியவர்களையே சாரும் என்றார். இறுதிப் போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோல் அகற்றப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சாமாஜ்வாதி கட்சியின் ஆலோசனை நல்லது என்ற அவர், புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்ட போது செங்கோலை வைத்து பாஜக மிகப்பெரிய நாடகத்தை நடத்தியதாக விமர்சித்துள்ளார். முன்னதாக, செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி ஆர்.கே.சௌத்ரி கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ( இரவு 7 மணி வரை) 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, வெளியே சென்றவர்கள், அலுவலகத்தில் இருந்து செல்வோர் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லவும்.
தேர்தல் ஆணையம் (ECI) மீதான நம்பிக்கையை குலைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தியுள்ளார். அத்துடன், சர்வதேச அரங்கில் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவின் பெருமையை, வதந்திகள் மூலம் சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவோரையும் அவர் கண்டித்துள்ளார். வாக்கு இயந்திரங்களை, ‘கருப்புப் பெட்டி’ என ராகுல்காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
*நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் 1000 மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து உயர் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. *SDAT-யின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு நாள் ஒன்றுக்கான உணவுப்படி ₹250லிருந்து ₹350ஆகவும், உபகரண மானியத் தொகை ₹1000லிருந்து ₹2000ஆகவும் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, திடீர் உடல்நலக்குறைவால் நேற்று இரவு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும், வீட்டில் சில நாள்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.