India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையை மையமாகக் கொண்ட இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 23% பங்குகளை ஆதித்யா பிர்லா குடும்பத்தைச் சேர்ந்த அல்ட்ராடெக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதாவது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 7.06 கோடி பங்குகளை, பங்குக்கு ₹267 வீதம் ₹1,885 கோடிக்கு வாங்கியிருக்கிறது அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் நிறுவனம். இதனால், வெளிச்சந்தையில் இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளின் விலை கடந்த 5 நாட்களில் 24% உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் குற்ற செயலில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என தமிழக அரசு பொய் கூறி வருவதாக சீமான் விமர்சித்துள்ளார். TTF வாசன், பஞ்சு மிட்டாய் வியாபாரி, மீம் கிரியேட்டர்களை தமிழக அரசு அடக்குவதாக விமர்சித்த அவர், குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் நடமாடுவதாக சாடியுள்ளார். சாராயம் விற்கும் அரசாங்கம் கள்ளச்சாராயத்தை எப்படி தடுக்கும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிதாக 1.48 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இதுவரை 1.15 கோடி பேர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதாக தெரிவித்த அவர், மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பிக்கப்பட்ட 1.48 லட்சம் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, தொண்டு நிறுவனம் மூலம் உதவிகளை செய்து வருகிறார். தனது செயல்பாடுகள் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் அவர், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில், அவரது இன்ஸ்டா பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அதாவது, தனது விலங்கு நல மருத்துவமனையில் தீவிரமான நோயுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நாய்க்கு ரத்தம் தேவைப்படுவதாக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் விவசாயிகளின் தற்கொலை தொடர்கதையாகி வருவதாக முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் வினாத்தாள் கசிவு ஒருபுறம் என விமர்சித்த அவர், தற்போது ராமர் கோயில் கருவறையிலும் கூட மழை நீர் கசிவதாகவும் கிண்டலடித்துள்ளார். மத்திய அரசு ஒரு கசிவு அரசாங்கமாகவே செயல்பட்டு வருவதாகவும், விவசாயிகளின் நலனில் சிறிதும் அக்கறையில்லை எனவும் சாடியுள்ளார்.
எதிர்க்கட்சிகளை அடக்கி, ஒடுக்க திமுக அரசு விரும்புவதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் முழுவதும் பறிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி பற்றி பேச அனுமதித்திருந்தால், கிழி கிழி என்று கிழித்திருப்பேன் என்றார். சட்டப்பேரவை தலைவர் நடுநிலை தவறி நடப்பதாகவும், முழுநேர அரசியல்வாதியை போல் பேரவையில் நடந்து கொள்வதாகவும் சாடியுள்ளார்.
மும்பையை சேர்ந்த நபர் ஒருவர், ஃபிளிப்கார்ட் தளத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் ₹485 மதிப்புள்ள செருப்பை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அந்த பொருள் அவரது கைக்கு கிடைக்கவில்லை. இது குறித்து அவர் தனது X பக்கத்தில் அப்போது பதிவிட்டிருந்தார். இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு அவரை தொடர்பு கொண்ட ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர், அவரது புகார் குறித்து விசாரித்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியா இந்து நாடு அல்ல என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்தியா பன்முகத்தன்மையும், பல சமுதாய மக்கள் ஒன்றிணைந்து வாழும் ஒரு நாடாகவும் இருப்பதாக தெரிவித்த அவர், குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே இந்தியா சொந்தம் அல்ல என்றார். நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல், மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் செயல்படுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முதல்வர் ஸ்டாலினின் கடிதத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகக் கூறிய அவர், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு இபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாரய பலிகளை இந்தியாவே உற்றுநோக்கி வருவதாக தெரிவித்த அவர், ஆனால், திமுக இந்த சம்பவத்தை மூடி மறைக்க விரும்புவதாக குற்றம் சாட்டியுள்ளார். பேரவையில் இதுகுறித்து விவாதிக்க மறுக்கும் திமுக, உயிரிழந்தவர்களுக்கு நீதியை பெற்று தராது எனவும், அதனால்தான் சிபிஐ விசாரணையை கேட்பதாக கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.