news

News June 27, 2024

ஏர்டெல் கட்டணம் விலை உயர வாய்ப்பு: நிபுணர்கள்

image

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, செல்போன் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, ஜியோ நிறுவனம் தற்போது கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதை தொடர்ந்து, அதன் போட்டியாளரான ஏர்டெல் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வலுவாக இல்லாத நிலையில், தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்வு நடவடிக்கை வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

News June 27, 2024

புகைப் பிடித்ததால் அரிய வகை நோய்

image

ஆஸ்திரியாவில் 30 ஆண்டுகளாக புகைப்பிடித்து வந்த 52 வயது நபர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நாளொன்றுக்கு ஒரு பாக்கெட் சிகரெட் பிடித்த அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில், தொண்டையில் 5 செ.மீ அளவிற்கு முடி வளர்ந்தது தெரியவந்தது. ஆண்டுதோறும் முடியை அகற்றிவந்த அவர், புகைப்பதை நிறுத்தியவுடன் முடி வளர்வது முற்றிலும் நின்றுவிட்டது.

News June 27, 2024

பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது

image

கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மகேஷ் என்பவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரை 6 பெண்கள் உள்பட 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 88 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கையில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

News June 27, 2024

‘அண்ணாமலை’க்காக அதிமுகவை சீண்டிய குஷ்பு

image

ரஜினி, குஷ்பு, மனோரமா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான ‘அண்ணாமலை’ திரைப்படம் வெளியாகி, இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிறது. இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, 22 அரங்கில் 100 நாள், 15 அரங்கில் 120 நாள், முதன் முறையாக 9 நாடுகளில் வெள்ளி விழா கண்ட ‘அண்ணாமலை’, அன்றைய ஆளுங்கட்சியின் (அதிமுக) தடைகளை வென்று, தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்ததாக தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

மீண்டும் ஆளுநர் ஆகிறாரா தமிழிசை?

image

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சந்தித்து பேசினார். முன்னதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழிசையை அமித் ஷா கண்டிக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இருவரும் சந்தித்து பேசியதால், தமிழிசைக்கு ஆளுநர் போன்ற முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

News June 27, 2024

‘கங்குவா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் நடித்துள்ள படம் ‘கங்குவா’. ₹300 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

News June 27, 2024

ஜூலை 6ஆம் தேதி தமிழக பாஜக செயற்குழு

image

தமிழக பாஜக மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், போரூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

News June 27, 2024

போலி மதுபானத்தை கண்டறிவது எப்படி?

image

அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மட்டுமே மது வாங்க வேண்டும் என சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இயல்பான விலையை விட குறைந்த விலையில் விற்கப்பட்டால் அல்லது லேபிளில் எழுத்துப்பிழை இருந்தால், அது போலியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. துர்நாற்றம் வீசும் மதுபானங்களையும், நெயில் பாலிஷ் அல்லது பெயிண்ட் வாசனை வரும் மதுவையும் குடிக்க கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

News June 27, 2024

T20 WC: இந்திய அணி பேட்டிங்

image

டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

News June 27, 2024

Truecaller வாடிக்கையாளர்களுக்கு இலவச ‘மோசடி காப்பீடு’

image

HDFC ERGO காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து, Truecaller செயலி ‘மோசடி காப்பீடு’ என்ற புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில், வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில் இந்த காப்பீடு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் Truecaller செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ₹10,000 வரையிலான காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது.

error: Content is protected !!