news

News June 28, 2024

‘கல்கி 2898 ஏடி’ ஓடிடி உரிமத்தை பெற்ற அமேசான்

image

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் உள்ளிட்ட பலர் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் வரும் அதிரடி ஆக்‌ஷன் பிரமாண்ட காட்சிகள், ஹாலிவுட் தரத்திற்கு இருப்பதாக ரசிகர்களின் புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமைத்தை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ₹200 கோடி கொடுத்து அமேசான் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News June 28, 2024

இந்தியா அபார வெற்றி

image

டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 20 ஓவர்களுக்கு இந்தியா 171 ரன்களை எடுத்திருந்த நிலையில், 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இங்கிலாந்து இழந்தது. நாளை இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள இறுதிப்போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

News June 28, 2024

பதற்றம்: அவசர எண் அறிவிப்பு

image

லெபனானில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், அங்கு உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மின்னஞ்சல் மற்றும் அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, cons.beirut@mea.gov.in என்ற மின்னஞ்சலிலோ அல்லது 961-76860128 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் தங்கள் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளன.

News June 28, 2024

IND சுழலில் தடுமாறும் ENG

image

T20 WC அரையிறுதிப் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் சிக்கி, ENG வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து வருகின்றனர். 3 ஓவர்களை வீசிய அக்‌ஷர் படேல், 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அதேபோல் குல்தீப் யாதவ் போட்ட 2ஆவது ஓவரிலேயே 2 ரன் அடித்திருந்த சாம் கரணை வெளியேற்றினார். 9 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு ENG 53 ரன்களை எடுத்துள்ளது.

News June 28, 2024

கோலியின் மிக மோசமான சாதனை

image

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி மோசமான சாதனை ஒன்றை செய்துள்ளார். ஒரே டி20 உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக களமிறங்கி மிகக்குறைந்த பேட்டிங் சராசரி கொண்ட வீரர்களின் பட்டியலில், 10.71 சராசரியுடன் கோலி 3ஆம் இடத்தை பிடித்துள்ளார். வங்கதேசத்தின் சௌமியா சர்க்கார் 9.6 சராசரியுடன் முதல் இடத்திலும், ஜிம்பாப்வே அணியின் வெஸ்லி 9.8 சராசரியுடன் 2ஆம் இடத்திலும் உள்ளனர்.

News June 28, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News June 28, 2024

டி.கே சிவகுமார் முதல்வராக வேண்டும்: மடாதிபதி

image

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலகி, டி.கே.சிவகுமாரிடம் முதல்வர் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று வொக்கலிகா சமூக தலைவர் குமார சந்திரசேகரநாத சுவாமி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று நடைபெற்ற கெம்பேகவுடா ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் சித்தராமையா முன்னிலையில் இந்த கருத்தை தெரிவித்தார். வொக்கலிகா சமூகத்தை சேர்ந்த டி.கே.சிவகுமார் தற்போது துணை முதல்வராக உள்ளார்.

News June 28, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News June 28, 2024

இங்கிலாந்துக்கு 172 ரன்கள் இலக்கு

image

டி20 உலகக்கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் ஷர்மா 36 பந்துகளுக்கு 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளுக்கு 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களும் எடுத்தனர்.

News June 28, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*கீழடி கொந்தகையில் ‘தா’ என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட உடைந்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. *கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்தோரில், 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. *தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ₹7 லட்சமாக உயர்த்தப்படும் என அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!