India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, விஷால் நடித்த ஆக்ஷன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து, தனுஷின் ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவ்வாக இருக்கும் ஐஸ்வர்யா, சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இன்று முதல் ஜூலை 1ஆம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவான இயல்பை ஒட்டியும், ஒரு சில இடங்களில் 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று அதிகபட்ச வெப்பநிலை 35-36, குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்பி ஆர்.கே.செளத்ரி தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன், அரசு நிர்வாகத்தில் செங்கோலின் பங்கு குறித்து திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளதாகவும், இதை உணர்ந்து தான் பிரதமர் நாடாளுமன்றத்தில் அதை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் செங்கோல் தமிழர்களின் பெருமை மிக்க அடையாளம் எனவும் அவர் கூறியுள்ளார்.
✍மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, உங்கள் சொந்தப் பாதையை பின்தொடருங்கள். ✍நாத்திகம் தொடங்கும் இடத்தில் கம்யூனிசம் தொடங்குகிறது. ✍வரலாற்றின் போக்கை தீர்மானிப்பதில் பணம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. ✍அனைத்து வரலாறுகளும் மனித இயல்பின் தொடர்ச்சியான மாற்றத்தைத் தவிர வேறில்லை. ✍பெண்களின் எழுச்சி இல்லாமல் பெரிய சமூக மாற்றங்கள் சாத்தியமில்லை என்று வரலாற்றை அறிந்த எவருக்கும் தெரியும்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘இந்தியன் – 2’ திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு ₹150 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
*1098 – முதலாம் சிலுவைப் போர் வீரர்கள் மோசுல் படைகளைத் தோற்கடித்தனர். *1911 – நாக்லா என்ற விண்கல் எகிப்தில் வீழ்ந்தது. *1950 – கொரியப் போரில் 1 லட்சத்திற்கும் அதிகமான கம்யூனிச சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். *1964 – மால்கம் எக்ஸ் ஆப்பிரிக்க-அமெரிக்க ஒற்றுமை அமைப்பைத் தோற்றுவித்தார். *1995 – மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில், இந்தியாவை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. இந்த நிலையில், நேற்று நடந்த நடப்பு 20 ஓவர் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் 2022 சம்பவத்திற்கு இந்தியா பழிதீர்த்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மும்பையைச் சேர்ந்த மருத்துவர் பிரெண்டன் ஃபெராவ் கடந்த ஜூன் 12ஆம் தேதி ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்தது. இதையடுத்து அந்த விரல் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல் புனே தொழிற்சாலையில் பணி செய்தபோது ஓம்கார் போடே என்பவருடைய டிஎன்ஏ மாதிரியும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், விரல் மற்றும் ஓம்காரின் டிஎன்ஏ ஒத்துபோயுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017ல் இந்தியாவில் 6ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக இருந்த உத்தரபிரதேசம், தற்போது 2ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக உருவெடுத்துள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பொருளாதார வளர்ச்சியால் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், தொழில் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: அவாவறுத்தல் ▶ குறள் எண்: 367 ▶குறள்: அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும். ▶பொருள்: ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.
Sorry, no posts matched your criteria.