news

News June 28, 2024

அரசியல் தாக்கங்களை அறிந்திருக்க வேண்டும்

image

இந்திய நீதித்துறையினர் அரசியல் செல்வாக்கிலிருந்து விலகியே இருக்கிறார்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “அரசியல் அழுத்தத்தை சந்திக்கவில்லை என்றாலும், நீதித்துறையினர் தங்கள் முடிவுகளின் வழியே வெளிப்படும் அரசியல் தாக்கங்களை அறிந்திருக்க வேண்டும். நிர்வாக வழக்கு விசாரணைகளில் அதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.

News June 28, 2024

விவாகரத்து பெற்றிருந்தால் மட்டுமே வழங்க முடியும்?

image

விவாகரத்து பெறாமல், பிரிந்து வாழும் கணவர்களுக்கு தனித்தனி ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் என சிவகாசி எம்.எல்.ஏ., அசோகன் கோரிக்கை விடுத்திருந்தார். உணவுத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கணவரிடம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்றிருந்தால் எப்படி தரமுடியும்? விவாகரத்து பெற்றிருந்தால் மட்டுமே வழங்க முடியும் எனப் பதிலளித்தார்.

News June 28, 2024

கர்நாடகா: கோர விபத்தில் 13 பேர் பலி

image

கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில், 2 குழந்தைகள் உள்பட 13 பேர் உடல்நசுங்கி பலியாகினர். சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு வேனில், பெலகாவி மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அப்போது குண்டனஹள்ளி அருகே, சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கவலைக்கிடமான நிலையில், மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News June 28, 2024

நிர்ப்பந்தத்தால் ‘நீட்’ தேர்வு விலக்கப்படும்: திருச்சி சிவா

image

நாடு முழுவதும் எழும் எதிர்ப்பால் ஏற்படும் நிர்ப்பந்தம் காரணமாக ‘நீட்’ தேர்வு நிச்சயம் விலக்கப்படும் என்று மாநிலங்களவை திமுக தலைவர் திருச்சி சிவா கூறியுள்ளார். அவசர நிலை குறித்து பேசும் பாஜக, பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை ஏன் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவில்லை? எனக் கேள்வி எழுப்பிய அவர், பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை நீடிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

News June 28, 2024

சென்னையில் ஒலிம்பிக் சைக்கிள் தளம்

image

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஒலிம்பிக் சைக்கிள் ஓடுபாதை தளம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் பேசிய அவர், “தமிழ்நாடு உடற்கல்வியியல் & விளையாட்டு பல்கலைக்கழகம் அருகில், ₹12 கோடி செலவில் சைக்கிள் ஓடுபாதை அமைக்கப்படும். மேலும், அங்கு பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளுக்கு முதன்மை நிலை மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

2 நாளில் ரேஷன் பொருள்களை பெற்றுக்கொள்ளவும்

image

துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக விநியோகிக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார். மே, ஜூன் மாதங்களுக்கு தேவையான பொருள்கள், ரேஷன் கடைகளுக்கு முழுமையாக அனுப்பப்பட்டதாக கூறிய அவர், அனைவருக்கும் து.பருப்பு, பாமாயில் கிடைக்கும் என்றார்.. இதனிடையே, அடுத்த 2 நாள்களில் ஜூன் மாதம் முடியவுள்ளதால், துவரம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள், உடனே சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 28, 2024

சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும் எலுமிச்சைச் சாறு

image

சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சைச் சாறு பருகுவது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைகிறது என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அதில் உள்ள வைட்டமின் சிறுநீர் கழிக்கும் போது, உண்டாகும் எரிச்சல், வலியைக் கட்டுப்படுத்துகிறது. உடலின் pH அளவை சமநிலையில் வைக்க உதவும்
எலுமிச்சை சாற்றினை பிழிந்த உடனே பயன்படுத்திவிட வேண்டும். ஒருபோதும் வெந்நீரில் பிழிந்து குடிக்கக் கூடாது.

News June 28, 2024

200 விக்கெட்டுகளை வீழ்த்தினார் குல்தீப்

image

T20 கிரிக்கெட் போட்டிகளில், குல்தீப் யாதவ் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், சிறப்பாக பந்துவீசிய அவர், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், T20இல் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 13ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். இதுவரை 160 போட்டிகள் விளையாடியுள்ள குல்தீப், 200 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 28, 2024

100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி

image

சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழகம் சார்பில் பங்கேற்று வெற்றி பெறும் 100 வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு பணி வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக விளையாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் வீரர்களுக்கு, ஒருநாள் உணவுப்படி ₹250இல் இருந்து ₹350ஆகவும், சீருடை மானியம் ₹4,000இல் இருந்து ₹6,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

News June 28, 2024

பைடன் – டிரம்ப் நேரடி விவாதம் தொடக்கம்

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடன் – டிரம்ப் இடையேயான நேரடி விவாதம் தொடங்கியது. உலகமே எதிர்பார்க்கும் இந்த விவாதம் அட்லாண்டாவில் 90 நிமிடங்கள் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.

error: Content is protected !!