news

News June 28, 2024

கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது

image

சென்னை திருவான்மியூரில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் சார்பில் நடத்தப்படும் கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது. அரங்கிற்குள் வருகை தந்த விஜய்க்கு மாணவர்கள், பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மாணவர்களுடன் ஒருவராக அவர் அமர்ந்துகொண்டார். குறிப்பாக, நெல்லையில் சாதிய ஆதிக்க கும்பலால் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரைக்கு அருகில் உட்கார்ந்த விஜய், சிறிது நேரம் அவருடன் கலந்துரையாடினார்.

News June 28, 2024

விஜயபாஸ்கரை கைது செய்ய கேரளா விரைந்தது தனிப்படை

image

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். ₹100 கோடி மதிப்பிலான சொத்துகளை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் கைதாவதில் இருந்து தப்பிக்க, விஜயபாஸ்கர் தலைமறைவானார். இதையடுத்து, அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கேரளாவில் பதுங்கி உள்ளதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.

News June 28, 2024

கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்

image

அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று ஜியோ நிறுவனம் தனது கட்டணத்தை 12-15% உயர்த்திய நிலையில், இன்று ஏர்டெல்லும் உயர்த்தியுள்ளது. அதன்படி, ₹179ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ₹199ஆகவும், 84 நாள்களுக்கு ₹455ஆக இருந்த கட்டணம் ₹509 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 1GB ₹265 பிளான் ₹299ஆகவும், 1.5GB ₹479 பிளான் ₹579ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

News June 28, 2024

பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு

image

மணிப்பூரில் முன்பைவிட, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது அதிகரித்துள்ளதாக இரோம் ஷர்மிளா வேதனையுடன் கூறியுள்ளார். மணிப்பூரின் இயற்கை & கனிம வளங்களை கார்ப்பரேட்களுக்குக் கொடுப்பதுதான் ஆளும் வர்க்கத்தின் திட்டம் எனக் குற்றஞ்சாட்டிய அவர், இந்த பின்னணியில்தான் அரசே ஆயுதங்களைக் கொடுத்து மெய்தி, குக்கி சமூகத்தினரிடையே கலவரத்தைத் தூண்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

ஆணவக் குற்றங்களை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றுக!

image

தமிழகத்தில் ஆணவக் குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 2018இல் உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பட்டியலிட்டுள்ளதாகக் கூறிய அவர், உச்ச நீதிமன்றம் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை செயல்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

News June 28, 2024

பூக்களின் விலை கடும் வீழ்ச்சி

image

தொடர் மழை காரணமாக பூக்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. அதன்படி, கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் ஒரு கிலோ ₹1,500க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ₹300க்கும், ₹1000க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ ₹400க்கும் விற்பனையாகிறது. அதேபோல், கிலோ ₹200க்கு விற்கப்பட்ட அரளி ₹70க்கும், ₹90க்கு விற்ற வாடாமல்லி ₹50க்கும், ₹125க்கு விற்பனையான சிகப்பு கேந்தி ₹85க்கும் விற்கப்படுகிறது.

News June 28, 2024

போருக்காக அல்ல: மக்களுக்கு செலவிட்டேன்: டிரம்ப்

image

அமெரிக்க வரலாற்றிலே இல்லாத அளவிற்கு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கியதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் டிரம்ப் பெருமிதமாக கூறியுள்ளார். அட்லாண்டாவில் ஜோ பைடனுடன் நடந்த நேருக்கு நேர் விவாதத்தில் பேசிய அவர், “கொரோனா காலத்திலும் எந்த பிரச்சினையும் இன்றி சிறப்பான ஆட்சியை நடத்தினேன். போருக்காக செலவிடாமல், மக்களின் அடிப்படைத் தேவைகள், சுகாதாரம் & வளர்ச்சிப் பணிகளுக்கு நிறைய செலவிட்டேன்” என்றார்.

News June 28, 2024

கனமழை படிப்படியாக குறையும்

image

தென் மாநிலங்களில் கனமழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கர்நாடகா, கேரளாவில் நாளை முதல் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும், தென்மேற்கு பருவமழை வலுவிழக்கப் போவதால் சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா, உத்தரகாண்ட், கோவா, ஒடிசாவிற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News June 28, 2024

IND W-SA W போட்டியை இலவசமாகக் காணலாம்

image

இந்தியா-தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஜூலை 1ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெற உள்ள இந்தப் போட்டியை, ரசிகர்கள் இலவசமாக நேரில் காணலாம் என MA.சிதம்பரம் மைதானத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது. மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில், போட்டியை இலவசமாகக் காண அனுமதிக்கப்பட்டுள்ளது.

News June 28, 2024

குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு

image

தமிழக அரசு, 3 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவித்துள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டெல்டாவில் குறுவை சாகுபடி அறுவடையின்போது பெரும்பாலும் மழைக்காலமாக இருப்பதால் பெருமளவு இழப்பீடு வழங்க வேண்டியிருந்தது. இதனால் 3 ஆண்டுகளாக தனியார் காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு வழங்க முன்வராமல் இருந்தன. இந்நிலையில், அரசு பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு கண்டுள்ளது.

error: Content is protected !!