India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீட் தேர்வை வெளிப்படையாக, நம்பகத் தன்மையுடன் நடத்துவதை உறுதி செய்வது தொடர்பாக மத்திய அரசு அமைத்த குழுவிடம் வரும் ஜூலை 7ஆம் தேதி வரை மாணவர்கள், பெற்றோர்கள் ஆலோசனைகள், கருத்துகளை கூறலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.<
தமிழகத்தில் மாவட்டந்தோறும் போதை மீட்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 64 பேர் உயிரிழந்த நிலையில், போதை மீட்பு சிகிச்சை மையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் புதிதாக 100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வயதிற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதற்கு தோனியை அவரது ரசிகர்கள் கூறுவது தெரிந்ததே. அவர்களின் புகழாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் வெளியாகி இருக்கிறது தோனியின் புதிய தோற்றம். ஐபிஎல் 2024-க்காக விண்டேஜ் தோற்றத்தில் நீண்ட கூந்தலுடன் தோன்றிய ‘தல’யின் ஸ்டைலிஸான புதிய புகைப்படத்தை பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் அலீம் ஹக்கீம் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்தப் படம் தற்போது வைரலாகி வருகிறது.
நீட் ரத்து தொடர்பான தமிழக அரசின் தீர்மானம், பயனற்ற அரசியல் வித்தை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுப்போம் எனக் கூறியுள்ள அவர், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, நீட் ரத்து தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (RIL) ₹21 லட்சம் கோடி சந்தை மூலதனத்தைக் கொண்ட முதல் இந்திய நிறுவனம் என்ற அரிய சாதனையை படைத்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் RIL பங்கின் மதிப்பு1.5% உயர்ந்து ₹3129 ஆக இருந்தது. ஜியோ ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், ரிலையன்ஸ் பங்குகள் தொடர்ந்து லாபம் அடைந்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில், ரிலையன்ஸ் சந்தை மதிப்பு 20% அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நீட் தேர்வுக்கு எதிராக ஜூலை 3இல் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக, ஜூன் 24ஆம் தேதி நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி விவகாரம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீராங்கனைகள் ஸ்மிரிதி (149) மந்தனா, ஷஃபாலி வெர்மா (155*) சதம் விளாசி அசத்தியுள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற IND அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஸ்மிரிதி, ஷஃபாலி, SA வீராங்கனைகளின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர். IND அணி தற்போதுவரை 314/1 ரன்களுடன் விளையாடி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஜூலை 2 வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2- 3°C அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 37°C ஒட்டி இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதிக்கக்கோரி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது. இதற்கு, மக்களவையில் சபாநாயகர் அனுமதி மறுத்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய பதிலை, நாடாளுமன்றத்தின் மூலமாக வழங்கவேண்டும் என்றார். ராகுல் பேசிக்கொண்டிருக்கையில், அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
‘E’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்டவர்கள் மாற்றங்களை எளிதில் ஏற்கும் மனமும், தர்க்க ஞானமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். பயணம் மீதான காதலும், உண்மையைத் துணிந்து பேசும் தைரியமும் கொண்டிருப்பார்கள் என்றும் இயன்றவரை நிதானமான விஷயங்களை செய்ய விரும்புகிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். ‘E’ என்ற எழுத்தில் பெயர் கொண்ட உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இதை பகிருங்கள்.
Sorry, no posts matched your criteria.