news

News June 28, 2024

பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்படும்

image

தமிழகத்தில் 500க்கும் குறைவான குடும்ப அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதிநேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 997 பகுதி நேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு 2 கிலோ மீட்டருக்கு மேல் மக்கள் பயணிக்காமல் இருக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

News June 28, 2024

புதிய சாதனை படைத்த ஷஃபாலி வர்மா

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் பெருமையை ஷஃபாலி வர்மா பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 205 ரன்கள் அடித்த அவர், அதிவேகமாக இரட்டை சதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக, கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மித்தாலி ராஜ் முதல் முறையாக இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

News June 28, 2024

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

image

பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. பேருந்து, ரயில் நிலையங்களில் பெண்களுக்கான காவல் நிலையம் அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பெண்களுக்கான திட்டங்கள் குறித்து அவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டதா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு உரிய வகையில் விளம்பரப்படுத்தப்படும் என அரசு ப்ளீடர் விளக்கமளித்துள்ளார்.

News June 28, 2024

மகளிருக்கு ₹1500, பெட்ரோல் விலை குறைப்பு : மகாராஷ்டிரா

image

சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகாராஷ்டிர அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 21 முதல் 60 வயதுடைய தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் ₹1500, ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு வருடத்திற்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். மின்சார கட்டணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகளின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். மும்பையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 28, 2024

வலுவான நிலையில் இந்திய அணி

image

சென்னையில் நடைபெற்றுவரும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 525 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய ஷஃபாலி வர்மா 205, ஸ்மிருதி மந்தனா 149 ரன்கள் எடுத்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 42*, ரிச்சா கோஷ் 43* ரன்களுடன் களத்தில் உள்ளனர். டெஸ்டில் ஒரு இன்னிங்சில் இந்திய மகளிர் அணி எடுக்கும் அதிகபட்ச ரன் இதுவாகும்.

News June 28, 2024

55,478 கைக்கணினிகள் வழங்க ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை

image

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க, 55,478 கைக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு கைக்கணிகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 2024-25 கல்வியாண்டில், வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு விரைவில் புதிய கைக்கணினிகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News June 28, 2024

நீட் தேர்வால் சிதைக்கப்படும் மாணவர்களின் கனவு: ராகுல்

image

நீட் தேர்வு விவகாரத்தில் பேரழிவு நடந்துள்ளதாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். நீட் வினாத்தாளை கசியவிட்டு, சிலர் ஆயிரம் கோடி குவித்துள்ளனர் எனக் கூறிய அவர், மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வலியுறுத்தியும் பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

கோப்பை வெல்ல ரோஹித் தகுதியானவர்: அக்தர்

image

டி20 உலகக்கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா முழு தகுதியுடையவர் என பாக்., முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை தவறவிட்ட இந்தியா, நிச்சயமாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் என்றார். மேலும், ரோஹித் ஒரு தன்னலமற்ற வீரர். சுயநலத்தை விட அணிக்காக விளையாடுபவர் எனக் கூறியவர், கடந்த ஆண்டு ODI WCல் இந்தியா தோல்வியடைந்தது வருந்தத் தக்கது என்றார்.

News June 28, 2024

கள்ளச்சாராயம் : பலி எண்ணிக்கை 65ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது. கருணாபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மேலும், சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

News June 28, 2024

‘கல்கி’ முதல் நாளில் வசூல் சாதனை

image

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பில் நேற்று வெளியான ‘கல்கி 2898 AD’ படம் உலகம் முழுவதும் வசூலை குவித்துள்ளது. உலகம் முழுவதும் நேற்று ஒரு நாளில் மட்டும் ₹191.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கிடைத்துள்ளதால் வரும் நாள்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!