India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தலில் மக்கள் அளித்த செய்தியை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை என சோனியா காந்தி கூறியுள்ளார். தன்னை தெய்வீக அம்சம் கொண்டவராக காட்டிக்கொண்ட மோடிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு தார்மீக தோல்வி என்று விமர்சித்த அவர், வெறுப்பு அரசியலை ஏற்கமாட்டோம் என்பதை மக்கள் பாஜகவுக்கு புரிய வைத்துள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், பாஜக எப்போதும் பிரிவினைவாத அரசியலையே முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023 -2024ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத்திட்டக் கணக்கு தாட்கள் தொகுக்கப்பட்டு 01.07.2024 அன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. அத்துறையின் cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்கு தாட்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நீட் தேர்வில் எவ்வித குளறுபடியும் இல்லை என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என அடிக்கடி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்புவதாக விமர்சித்த அவர், பொய்யை திரும்ப திரும்ப கூறி அதனை உண்மையாக்க முயல்வதாக குற்றம் சாட்டினார். மேலும், ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் தேர்வு முக்கிய காரணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டுநர்களுக்கான உயிர்காக்கும் முதலுதவிப் பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு போக்குவரத்துத் துறையின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் இதர பொது வாகன ஓட்டுநர்களுக்கு, விபத்து மற்றும் அவசர காலங்களில் வழங்க வேண்டிய நெஞ்சழுத்த சிகிச்சை (CPR) மற்றும் விபத்து காயங்களுக்கான அவசர சிகிச்சை போன்ற உயிர்காக்கும் முதலுதவி குறித்து பயிற்சிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை இபிஎஸ் முன்வைப்பதாக அமைச்சர் பிடிஆர் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை திவாலாகும் நிலைக்கு முந்தைய அதிமுக அரசு கொண்டு சென்றதாக குற்றம் சாட்டிய அவர், தற்போது அதனை சரிசெய்து நல்ல முறையில் இயங்குவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஊழல் நடைபெறுவதாக இபிஎஸ் கூறியிருந்தார்.
மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய வீராங்கனைகள் என்ற சாதனையை ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி படைத்துள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர். முன்னதாக, பாக்., அணியின் சஜ்ஜிதா ஷா மற்றும் கிரண் பலுச் ஜோடி 241 ரன்களை எடுத்திருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு தொடர்பாக ஆக்கப்பூர்வமான விவாதத்துக்கு பாஜக தயாராக இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புவதாக குற்றம் சாட்டிய அவர், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அமைதியான விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு நடிப்பில் 2018ல் இந்தியில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் ‘அந்தாதூன்’. பிரஷாந்த் நடிப்பில், தியாகராஜன் இயக்கத்தில் இப்படம் தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டே இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
T20 WCல் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா பார்படாஸ் மைதானத்தில் மோத உள்ள நிலையில், நாளை முழுவதும் அங்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. டாஸ் போடும் நேரத்திற்குள் மழை நிற்காவிட்டால் கூடுதலா 190 நிமிடங்கள் ஒதுக்கப்படும். நாள் முழுவதும் மழை பெய்தால் மறுநாள் (ரிசர்வ் டே) போட்டி நடைபெறும்.
கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதைத் தொடர்ந்து மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவை கூடியதும் அதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இதனால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.