India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் தனது குடும்பத்துடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று, மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், சென்னையில் நடைபெறும் தனது மகள் வரலட்சுமியின் திருமண வரவேற்புக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பில் ராதிகா, வரலட்சுமி மற்றும் அவரது வருங்கால கணவர் நிக்கோல் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ( இரவு ஒரு மணி வரை) 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, குமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, இரவில் வீட்டிற்கு செல்வோர், பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நாளை நடைபெறும் டி20 இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறுகிறது. பயிற்சியாளராக மீண்டும் தொடர அவர் விருப்பம் தெரிவிக்காததால் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது. இந்நிலையில், இந்திய அணி உலகக் கோப்பையை வென்று ராகுலின் கரங்களில் ஒப்படைக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சென்னை உட்பட பல நகரங்களில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்து மறு கட்டுமானம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். 6,746 குடியிருப்புகள், ரூ.1,146 கோடியில் மறு கட்டுமானம் செய்யப்படும் என்றும் சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அடுத்த 3 ஆண்டுகளில் சீரமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அந்த கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இணைத்து அந்த கடிதத்தை முதல்வர் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தேர்தலில் ஹேமந்த் சோரன் பரப்புரை செய்வதை தடுக்கவே பாஜக கைது செய்ததாக குற்றம்சாட்டிய அவர், சூழ்ச்சிகள் அனைத்தையும் முறியடித்து அவர் விடுதலை ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளார். பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன், இன்று ஜாமினில் விடுதலையானார்.
7, 16, 25, ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், 7ஆம் எண்ணின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் என எண் கணித ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஏழு என்பது சிறப்பான எண் எனவும், ஏழு கடல்கள், ஏழு மலைகள், சப்த ரிஷிகள், சப்த மாதர்கள் என்று இயற்கையோடு ஒன்றிவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த எண்ணின் அதிபதி கேது என்பதால், இயல்பிலேயே தெய்வ பக்தி இருக்கும் எனவும், விநாயகரை வழிபட்டால் நினைத்தது கைகூடும் என்றும் கூறுகின்றனர்.
நடந்து முடிந்த 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று பரிசு வழங்கினார். திருவான்மியூரில் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த இந்த விழா சற்றுமுன் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக பரிசு வழங்கும் விழா ஜூலை 3 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். பழிவாங்கும் நோக்கத்தாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் ஹேமந்த் கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், அவருடன் பேசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகக் கூறினார். மேலும், அரசியலமைப்பை பாதுகாக்கும் உணர்வோடு முன்னேறுபவர்களை உண்மையே பாதுகாக்கிறது என்றார்.
ஆணவப் படுகொலைகளை தடுக்கவும், உரிய தண்டனைகள் பெற்றுத் தருவதற்கும் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். ஆணவப் படுகொலையை ஏற்க முடியாது என்ற அவர், இதற்கான தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஆணவப் படுகொலைகளை தடுக்க தமிழக அரசு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.