news

News June 29, 2024

UGC-NET தேர்வு தேதி அறிவிப்பு

image

கடந்த ஜூன் 18ஆம் தேதி நடைபெற்ற UGC-NET தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, அதற்கு மறுநாள் மத்திய கல்வி அமைச்சகம் தேர்வை ரத்து செய்தது. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை UGC-NET தேர்வு கணினி வழியில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. CSIR NET தேர்வு ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 29, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News June 29, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் ஒலிம்பிக் சைக்கிள் ஓடுபாதை தளம் அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார். *பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. *அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. *ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

News June 29, 2024

ஆகச் சிறந்த நகைச்சுவை: அண்ணாமலை

image

மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா, சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,
கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்குத் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யாமல், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில், தண்டனைகள் கடுமையாக இல்லை என திருத்த மசோதா கொண்டு வருவதாக கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என விமர்சித்துள்ளார்.

News June 29, 2024

‘பைசன் காளமாடன்’ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது

image

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி உள்ளிட்டோர் நடித்துவரும் படம் ‘பைசன் காளமாடன்’. நீலம் புரொடக்‌ஷன் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

News June 28, 2024

‘கல்கி’ இரண்டாம் பாகம் முழுக்க கமல்தான்

image

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் நடித்துள்ள ‘கல்கி ஏடி 2989’ படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் கமல் சில நிமிடங்கள் மட்டுமே வருவதால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாகத்தில் தனது கேரக்டர் அதிகமாக வரும் என்றும், இதை இயக்குனர் நாக் அஸ்வின் தன்னிடம் முன்பே கூறியதாகவும் கமல் விளக்கமளித்துள்ளார்.

News June 28, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

* மேஷம் – நன்மை உண்டாகும், *ரிஷபம் – ஊக்கமான நாளாக அமையும் *மிதுனம் – ஆர்வமுடன் செயல்படுவீர், *கடகம் – தேவையில்லாத பயம் ஏற்படும், *சிம்மம் – பரிவு உண்டாகும், *கன்னி – தடை ஏற்படும், *துலாம் – தோல்வி வரும், *விருச்சிகம் – வீண் செலவு வரும், *தனுசு – பக்தி உண்டாகும், *மகரம் – பதவி உயர்வு கிடைக்கும், *கும்பம் – முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும், *மீனம் – பாராட்டு குவியும்.

News June 28, 2024

ஆசிரியர்கள் திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்

image

நாட்டை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பீகாரில் உள்ள 4 லட்சம் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதை எதிர்த்து பலர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், பிடிக்காதவர்கள் வேலையை விட்டுவிட தயாராக இருக்க வேண்டும் என நீதிமன்றம் கண்டித்ததுடன், அவர்கள் அனைவரையும் தேர்வு எழுதவும் உத்தரவிட்டது.

News June 28, 2024

இறுதிப் போட்டியில் கோலி சதமடிப்பார்: மாண்டி பனேசர்

image

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலி சதம் அடிப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் கூறியுள்ளார். இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று தெரிவித்த அவர், வெற்றிக்கு கோலி முக்கிய காரணமாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி கோலி, 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

News June 28, 2024

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

2.23 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ₹30, ஒரு லிட்டர் பாமாயில் ₹25க்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாத ரேஷன் அட்டைதாரர்கள் ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தேவையான அனைத்து துரித ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!