news

News June 29, 2024

அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முழு வேலை நாள்

image

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ல் திறக்கப்படுவதாக இருந்த பள்ளிகள் பல்வேறு காரணங்களால் ஜூன் 10க்கு ஒத்திவைக்கப்பட்டது. தாமதமாக திறக்கப்பட்டதால் விடுபட்ட நாள்களை வேலை நாள்களாக ஈடுகட்ட, சனிக்கிழமைகளில் வேலை நாள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் முழு வேலை நாளாகும். எந்த பள்ளியும் அரை நாள் நடத்தி விட்டு விடுப்பு அளிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

News June 29, 2024

அதிபருக்கு சூனியம் வைத்த பெண் அமைச்சர் கைது

image

மாலத்தீவின் சுற்றுலா துறை அமைச்சர் ஃபாத்திமா ஷாம்னாஸ் சலீம் மற்றும் அதிபர் மாளிகையில் அமைச்சருக்கு இணையான பதவி வகித்து வரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகியோர் அதிபர் முகமது மொய்சுவுக்கு பில்லி, சூனியம் வைத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வீட்டை சோதனை செய்ததில் சந்தேகத்திற்குரிய பல பொருட்கள் கைப்பற்றபட்டன. மாலத்தீவு சட்டப்படி, பில்லி, சூனியம் வைத்தால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

News June 29, 2024

2024 டி20 WC: தோல்வியே சந்திக்காத தென்னாப்பிரிக்கா

image

2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் இன்று இறுதிப் போட்டியில் மோதவுள்ள தென்னாப்பிரிக்க அணி, இப்போட்டித் தொடரில் தோல்வியே சந்திக்கவில்லை. இதுவரையிலான டி20 உலகக் கோப்பைகளில் 7 முறை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி, அந்த அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்து தென்னாப்பிரிக்க அணி வெளியேறியுள்ளது. முதல்முறையாக இம்முறைதான் இறுதிப் போட்டி வரை தென்னாப்பிரிக்க அணி முன்னேறியுள்ளது.

News June 29, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*மதுவிலக்கு திருத்தச்சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. *முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ளதாக அமைச்சர் T.R.B.ராஜா தெரிவித்துள்ளார். *தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா இரட்டை சதம் அடித்தார்.
*இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் T20 WC இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.

News June 29, 2024

வரலாற்று புத்தகம்: அமைச்சர்

image

இந்து கடவுள்கள் – இஸ்லாமியர்கள் இடையேயான தொடர்பு குறித்த அனைத்து வரலாற்றையும் புத்தகமாக தொகுத்து, முதல்வரின் அனுமதி பெற்று வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டசபையில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர், பல பகுதிகளில் இந்து கோயில்களில் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News June 29, 2024

ரயிலில் கழன்று சென்ற பெட்டிகள்

image

எர்ணாகுளம்-டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், கேரளாவின் வள்ளத்தோடு ரயில் நிலையம் அருகே சென்றபோது, திடீரென ரயிலின் பெட்டிகள் கழன்று தனியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மிதமான வேகத்தில் ரயில் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால், பெட்டிகள் சிறிது தூரம் சென்று தானகவே நின்றது. பின்னர் மற்றொரு ரயில் என்ஜினுடன் பெட்டிகள் இணைக்கப்பட்டு புறப்பட்டு சென்றது.

News June 29, 2024

8 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

image

மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றிடக்கோரி அந்தந்த முதலமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

News June 29, 2024

ஓராண்டில் 61,047 ரேஷன் கார்டுகள்

image

அரசின் மானிய விலையிலான உணவுப் பொருட்கள், பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை பெற ரேஷன் கார்டு கட்டாயம். இந்நிலையில், தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2023-24 ஆண்டில் 61,047 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021-22ல் 7.50 லட்சம் கார்டுகளும், 2022-23ஆம் ஆண்டில் 2.21 கார்டுகளும் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

News June 29, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஜூன்- 29 | ▶ஆனி – 15 ▶கிழமை: சனி | ▶திதி: அஷ்டமி ▶நல்ல நேரம்: காலை 07:45 – 08:45 வரை, மாலை 04:45- 05:45 வரை ▶கெளரி நேரம்: காலை 10:45 – 11:45 வரை, இரவு 09:30 – 10:30 வரை ▶ராகு காலம்: காலை 09:00 – 10:30 வரை ▶எமகண்டம்: பிற்பகல் 01:30 – 03:00 வரை ▶குளிகை: காலை 06:00 – 07:30 வரை ▶சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம் ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

News June 29, 2024

ராகுல் காந்திக்கு முதல்வர் கடிதம்

image

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்று கூறி மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலங்கள், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டைப் போன்று அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!