news

News June 29, 2024

சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பீர்களா?

image

சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சனி தோஷம் விலகும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்களும் நீங்கும் என ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. மேலும், சனி நீராடுவதால் புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் முற்றிலும் குணமடையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். இதுதவிர, சனிக்கிழமை நீராடுவதால், சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்றுவிடும்.

News June 29, 2024

மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சமந்தா

image

நடிகை சமந்தா தற்போது வெப் தொடர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், ஆதித்ய ராய்கபூர் நாயகனாக நடிக்கும் ‘ரக்தபீஜ்’ என்ற தொடரில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ராஜ், டி.கே., ஆகியோர் இயக்கும் இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், ஃபேமிலி மேன்-2, சிட்டாடல்: ஹனி பல்லி போன்ற வெப் தொடர்களில், சமந்தா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News June 29, 2024

ஒருவருக்கு எத்தனை மதுபாட்டில் விற்கலாம்?

image

மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்குவதை தடுக்க, ஒருவருக்கு எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை வெளியிடுமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பவர்கள் சிக்கும்போது டாஸ்மாக் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

News June 29, 2024

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ குடிக்கலாம்?

image

டீயை ஒருநாளைக்கு எத்தனை முறை குடிக்கலாம் என அனைவரிடையேயும் கேள்வி நிலவுகிறது. அதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிப்பதை தெரிந்து கொள்வோம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். அதற்கு டீயும் விதி விலக்கல்ல. ஆதலால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது 2 முறை மட்டும் டீ பருகலாம், இதனால் பாதிப்பில்லை, சர்க்கரையை குறைவாக கலப்பது நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

News June 29, 2024

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய வோடஃபோன் ஐடியா

image

ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் ஐடியா நிறுவனமும், பிரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 11% முதல் 24% வரை உயர்த்தியுள்ளது. பிரீபெய்டில், 28 நாள்கள் வேலிடிட்டி (நாள்தோறும் 1.5GB டேட்டா) ரீசார்ஜின் விலை ₹299லிருந்து ₹349, 365 நாள்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் விலை ₹2,899லிருந்து ₹3,499ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

News June 29, 2024

டி20 WC இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பு

image

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நகரில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் போடுவது தாமதமாகி போட்டித் தொடங்குவது தாமதமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடக்கும்போது மழை குறுக்கிட்டால், நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

News June 29, 2024

சனிக்கிழமை இதை செய்தால் தீராத கடனும் தீரும்

image

சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் இரும்பு பொருட்களை வாங்கக் கூடாது என ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, இரும்பு சனிபகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே இரும்பு பொருட்களை சனியன்று வாங்கினால், குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். ஆனால் இரும்பு பொருட்களை தானமாக மற்றவர்களுக்கு சனிக்கிழமையில் வழங்கினால் தீராத கடனும் தீரும் என்று ஆன்மிகம் கூறுகிறது.

News June 29, 2024

கூடலூர், பந்தலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க தாமதமானதால் இன்று சனிக்கிழமை, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளும் இயங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் இரவு முதல் விடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

News June 29, 2024

எதிர்க்கட்சி எம்.பிக்களின் செயல்பாடு மோசம்: கங்கனா

image

சாலைகள், தெருக்களில் சண்டையிடுபவர்களைப் போல், எதிர்க்கட்சி எம்.பிக்கள் செயல்படுவதாக பாஜக எம்.பி., கங்கனா விமர்சித்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தை முன்வைத்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய கங்கனா, “அவர்களின் நடவடிக்கை அச்சுறுத்துகிறது. அவைத் தலைவர் உள்ளிட்ட யாருடைய அறிவுரையையும் கேட்க அவர்கள் மறுக்கிறார்கள்” எனக் குற்றஞ்சாட்டினார்.

News June 29, 2024

11 ஆண்டுகால இந்திய அணியின் ஏக்கம் தணியுமா?

image

2013 சாம்பியன்ஸ் கோப்பையே இந்திய அணி கடைசியாக கைப்பற்றிய ICC கோப்பை ஆகும். அதன்பிறகு கடந்த 11 ஆண்டுகளாக எந்த ICC கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை. இந்நிலையில் 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இன்று இந்திய அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வென்று தனது ஏக்கத்தை இந்திய அணி தணிக்குமா என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

error: Content is protected !!