India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். பட்டாசு தயாரிக்க கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ₹3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. IND Vs SA அணிகள் மோதும் இந்தப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
*ரிச்சி ரிச்சர்ட்சன் – ரெப்ரீ
*கிறிஸ்டோஃபர் கேப்னி, ரிச்சர்ட் இல்லிங்வொர்த் – கள நடுவர்கள்
*ரிச்சட் கெட்டில்பரோ – டிவி நடுவர்
*ரோட்னி டக்கர் – 4ஆவது நடுவர்
தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த செயற்கை கருத்தரித்தல் மையம் இனி அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கோவை, சேலத்தில் விரைவில் இம்மையங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.
நடிகர் சூர்யா – பாலிவுட் இயக்குநர் ஓம்பிரகாஷ் மெஹ்ரா கூட்டணியில் உருவாகவிருந்த ‘கர்ணா’ படத்தை கைவிட படக்குழு முடிவு செய்துள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக்கப்பட இருந்த இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷனுக்கு ₹15 கோடி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. மகாபாரதத்தின் கர்ணனை மையப்படுத்தி உருவாகவிருந்த இப்படம் கைவிடப்பட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏற்கெனவே உள்ள தண்டனை போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டு திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இனி கள்ளச்சாராயம் உற்பத்தி, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனையுடன், ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். விற்பவர்களின் அசையா சொத்துகளையும் பறிமுதல் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய மகளிர் அணி 603 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில், டாஸ் வென்ற IND அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக விளையாடிய ஷஃபாலி 205, ஸ்மிருதி 149, ரிச்சா 86, ஹர்மன்பிரீத் 69, ஜெமிமா 55 ரன்கள் குவித்தனர். SA தரப்பில், டெல்மி டக்கர் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்தப் போட்டியில், IND அணி 4 சாதனைகளை படைத்துள்ளது.
மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து, இதுவரை 65 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், இந்த திருத்தச் சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய மகளிர் அணி 4 சாதனைகளை படைத்துள்ளது.
*டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் அதிக ரன்கள் (525)
*ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் (603/6d)
*ஒரு இன்னிங்சில் குறைந்த ஓவர்களில் அதிக ரன்கள் (இதுவரை 115.1 ஓவர் 603 ரன்கள்)
*டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் ரேட்டுடன் (5.23) அதிக ரன்கள் குவித்த அணி (603 ரன்கள்).
இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு (FD), தற்போது வழங்கிவரும் வட்டி விகிதங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.
*SBI (அம்ரித் கலாஷ்) – 400 நாள்கள் – 7.10%
*PNB – 400 நாள்கள் – 7.25%
*HDFC – 18-21 மாதங்கள் – 7.25%
*ICICI – 15-24 மாதங்கள் – 7.20%
*BOB – 2-3 வருடங்கள் – 7.25%
*கனரா – 444 நாள்கள் – 7.25%
*ஆக்சிஸ் – 17-18 மாதங்கள் – 7.20%
விக்கிரவாண்டி சட்டமன்றத்தொகுதியில் வரும் 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமகவை ஒரு போட்டியாளராகவே தங்கள் கட்சி கருதவில்லை என்று கூறியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தொடர்ந்து வெற்றி பெறுவதை சுட்டிக்காட்டிய அவர், இத்தேர்தலில் பாமகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.