news

News June 29, 2024

டிராவிட் காலத்தில் இந்திய அணி 101 வெற்றி, 37 தோல்வி

image

இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட் பதவிகாலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. அவரது பதவிகாலத்தில் இந்திய அணி 147 போட்டிகளில் விளையாடி 101இல் வென்றுள்ளது. 37 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. 7 போட்டிகள் “டிரா” ஆகியுள்ளது. 2 போட்டிகள் “டை”யில் முடிந்துள்ளது. 28 ஐசிசி போட்டிகளில் விளையாடி 24இல் வெற்றி, 4இல் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக, 70 டி20 போட்டிகளில் விளையாடி 51இல் வாகை சூடியுள்ளது.

News June 29, 2024

அமைச்சர்களுக்கு நேரில் அழைப்பு விடுத்த சரத்குமார்

image

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் அவருக்கும் தாய்லாந்தில் ஜூலை 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோரை சரத்குமார் இன்று நேரில் சந்தித்து மணவிழா அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.

News June 29, 2024

காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள்

image

லடாக்கில் ஆற்றைக் கடக்கும்போது ஏற்பட்ட வெள்ளத்தில், 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக்கில் உள்ள நியோமா பள்ளத்தாக்கு பகுதியில் அதிகாலை 1 மணியளவில் 5 வீரர்கள் டி-72 டேங்க் பயிற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மந்திர் மோர் அருகே ஆற்றைக் கடக்கும்போது, நடந்த மேக வெடிப்பால், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில், 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

News June 29, 2024

செங்கோல் விவகாரம்: சமாஜ்வாதிக்கு மாயாவதி பதில்

image

நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி ஆர்.கே.சௌத்ரி கூறியிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, “செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்கலாமா, கூடாதா என்று பேசும் சமாஜ்வாதி கட்சியினர், நலிவடைந்த, ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளில் பெரும்பாலும் மவுனம் காக்கின்றனர்” எனப் பதிலளித்துள்ளார்.

News June 29, 2024

விமான நிலைய கட்டமைப்பை ஆய்வு செய்ய ஆணை

image

சூறைக்காற்றுடன் பெய்த வரலாறு காணாத மழையால், டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலியாகினர். நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தேசிய அளவில் சர்ச்சையானது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளை மறு ஆய்வு செய்யுமாறு, விமான போக்குவரத்துத் துறைக்கு மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

News June 29, 2024

டி20 WC கோப்பையை வெல்லும் அணிக்கு ₹20.42 கோடி பரிசு

image

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்க அணியும் இன்றிரவு மோதவுள்ளன. இப்போட்டியில் வென்று கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ₹20.42 கோடி பரிசு வழங்கப்படும். அதேபோல் 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு, ₹10.67 கோடி அளிக்கப்படும். அரையிறுதிப் போட்டிகளில் தோற்ற இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ₹ 6.56 கோடி அளிக்கப்படவுள்ளது.

News June 29, 2024

பெண்களை ஆண் போலீசார் கைது செய்ய அதிகாரமுள்ளதா?

image

குற்றச் செயலில் ஈடுபடும் பெண்களை மாலை 6 மணிக்குப் பிறகும், காலை 6 மணிக்கு முன்பும் விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்து செல்லக் கூடாது என 1973ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தின் 46ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது. பெண் போலீசார் மட்டுமே அவர்களை கைது செய்ய முடியும் எனவும், அதேநேரத்தில் கொடிய குற்றத்தில் ஈடுபடும் பெண்களை நீதிபதி அனுமதி பெற்று, ஆண் போலீசார் கைது செய்யலாம் என்றும் அச்சட்டம் தெரிவிக்கிறது.

News June 29, 2024

மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் காலமானார்

image

ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி. ஸ்ரீனிவாஸ் (76) உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, அவர் உயிர் பிரிந்தது. ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News June 29, 2024

கல்கி 2898 AD படம் ஒரு காவியம்: ரஜினிகாந்த்

image

கல்கி 2898 AD படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். படத்தை பார்த்துவிட்டதாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தப் படம் காவியம் என வர்ணித்துள்ளார். மேலும், இந்திய சினிமாவை வேறு நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக, இயக்குநர் நாகாஸ்வினை பாராட்டியுள்ள அவர், இந்தப் படத்தில் நடித்த அஸ்வினி தத், அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோரை வாழ்த்தியுள்ளார்.

News June 29, 2024

நிலுவையை ₹471 கோடியாக குறைத்துள்ளோம்: PTR

image

அரசு கேபிள் டி.வி விவகாரத்தில் தமிழக அரசு மீது இபிஎஸ் குற்றம்சாட்டுவது கபட நாடகம் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வரும்போது, அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு ₹575 கோடி கடன் இருந்ததெனக் கூறிய அவர், இப்போது அந்த நிலுவைத் தொகையை ₹471 கோடியாக குறைத்துள்ளோம் என்றார். மேலும், அரசு கேபிள் டி.வி., நிர்வாகத்தை ஆளுமையற்ற நிறுவனமாக அதிமுக அரசு வைத்திருந்ததாகவும் விமர்சித்தார்.

error: Content is protected !!