news

News June 29, 2024

ட்ரெண்டிங் ஆகும் #RajkotAirport

image

குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலைய மேற்கூரை கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்துள்ளது. இதில், நல்வாய்ப்பாக யாரும்
காயமடையவில்லை. எனினும் டெல்லியில் இதேபோல் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் பலியான சோகம் மறையாத நிலையில், ராஜ்கோட் விமான நிலையத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதால், இதை சுட்டிக்காட்டி, எக்ஸ் பக்கத்தில் #RajkotAirport என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

News June 29, 2024

டாஸ்மாக் சரக்கில் “கிக்” இல்லை : துரைமுருகன்

image

உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவைப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்கம் விற்கும் சரக்குகளில் “கிக்” இல்லாததால் சிலர் கள்ளச்சாராயத்தை குடிக்கின்றனர். அரசாங்கம் விற்கும் சரக்கு சிலருக்கு Soft Drink போல மாறிவிடுகிறது எனக் கூறிய அவர், விட்டில் பூச்சி விளக்கில் போய் விழுவதைப் போன்று விழுந்து சிலர் செத்து விடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

News June 29, 2024

பகத் ஃபாசில் மீது வழக்குப்பதிவு

image

நடிகர் பகத் ஃபாசில் மீது கேரளாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அவர் நடித்து வரும் ‘பைங்கிலி’ படத்தின் காட்சிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் படமாக்கப்பட்டன. அப்போது, நோயாளிகள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் சிரமத்தை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஊடக செய்திகளின் அடிப்படையில், மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து அவர் மீது வழக்கு பதிந்துள்ளது.

News June 29, 2024

கென்சிங்டன் ஓவல் மைதானம்: ஒரு கண்ணோட்டம்

image

T20 WC தொடரில், IND Vs SA இடையிலான இறுதிப் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 50 போட்டிகள் நடந்துள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 31 முறையும், 2ஆவதாக பேட்டிங் செய்யும் அணி 16 முறையும் வென்றுள்ளன. இதேபோல, முதல் இன்னிங்ஸ் சராசரி ரன்கள் 138, 2ஆவது இன்னிங்ஸ் சராசரி ரன்கள் 125. இறுதிப் போட்டியில் இந்திய அணி எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும்?

News June 29, 2024

காய்கறிகளின் விலை மளமளவென குறைந்தது

image

தமிழகத்தில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அன்றாடம் சமையலுக்கு தேவைப்படும் காய்கறிகளின் விலை எகிறியதால் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்படைந்தனர். இந்த நிலையில் தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி கிலோ ₹44, பீன்ஸ், அவரை ₹70, முருங்கைக் காய், சின்ன வெங்காயம் ₹40, முள்ளங்கி, உருளை ₹30, கத்திரி, வெண்டை, கோஸ், புடலங்காய் கிலோ ₹16-₹20 வரை விற்கப்படுகிறது.

News June 29, 2024

வீடுதோறும் காவல்நிலையம் திறக்க முடியாது

image

சாராய விற்பனையை தடுக்க தெருவுக்கு தெரு காவல் நிலையம் திறக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மதுவிலக்கு தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், கள்ளச்சாராயம் விற்பவர்களை தூக்கில் போட சட்டம் இயற்றலாம், அதற்கும் ஒரு நியாயம் வேண்டும் என்று கூறினார். மேலும், மதுவிலக்கு குறித்து சரியான நேரத்தில் முதல்வர் சரியான முடிவை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

News June 29, 2024

தமிழ் பட வாய்ப்பை இழந்த ஜான்வி கபூர்

image

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக கதை கேட்டு வந்த அவர், சூர்யாவின் ‘கர்ணா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் அப்படம் கைவிடப்படத்தால், அவர் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாக இருந்த வாய்ப்பு கைநழுவியுள்ளது.

News June 29, 2024

தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, இன்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தில் மற்ற பகுதிகளில் மிதமான மழைபெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News June 29, 2024

சென்னானூர் அகழாய்வில் கொழுமுனை கண்டெடுப்பு

image

கிருஷ்ணகிரி சென்னானூர் அகழாய்வில், 75 செ.மீ., ஆழத்தில் இரும்பிலான ஏர்கலப்பையின் கொழுமுனை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 1.2 கிலோ எடையிலான அந்த கொழுமுனை 32 செ.மீ., நீளமும், 4.5 செ.மீ., அகலமும் கொண்டுள்ளது. பண்டைய காலத்தில் விவசாயப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட கொழுமுனையாக இருக்கலாம் என்றும் முழு ஆய்வுக்கு பிறகு அது எந்த காலத்தைச் சார்ந்தது என தெரியவரும் என்றும் தொல்லியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News June 29, 2024

மாருதி, டாடா நிறுவன கார்கள் விலை தள்ளுபடி

image

ஜுன், ஜூலை மாதங்களில் விற்பனை மந்தமாக இருப்பதையடுத்து, 4 ஆண்டுக்கு பிறகு தற்போது இந்தியாவில் கார்கள் விலையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மாருதி சுசூகியின் ஆல்டோ ₹43,000, எஸ் பிரஸோ ₹38,000, செலரியோ ₹41,000, இக்னிஸ் ₹41,000, வேகன் ஆர் ₹34,000, பலினோ ₹36,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டாடா, ஹியூன்டாய், ஹோண்டா, மஹிந்திரா நிறுவனங்களும் விலையை தள்ளுபடி செய்துள்ளன.

error: Content is protected !!