news

News June 29, 2024

T20 WC: இந்திய அணி பேட்டிங்

image

SA-க்கு எதிரான T20 இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்த 2 அணிகளும் மோதவுள்ளதால், யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லாத இந்திய அணியின் ஏக்கம் இந்த போட்டியில் தீருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என கமெண்டில் கூறுங்கள்.

News June 29, 2024

இறுதிப் போட்டியில் இதை மட்டும் செய்யாதீர்கள்: ஸ்ரீகாந்த்

image

இந்திய அணி டாஸ் வென்றால் பவுலிங் தேர்வு செய்யக்கூடாது என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். பார்படாஸ் மைதானத்தின் தன்மை மற்ற மைதானங்களில் இருந்து முற்றிலும் வேறாக இருக்கும் என்ற அவர், முதல் பேட்டிங் செய்யும் அணிக்கு மைதானம் நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்றார். ஒருவேளை தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தால், அதை இந்தியா சேஸ் செய்வது எளிதல்ல எனவும் கூறியுள்ளார்.

News June 29, 2024

இரவில் யூடியூப் வீடியோ பார்ப்பவரா நீங்கள்?

image

வாடிக்கையாளர்களை தக்கவைக்க யூடியூப் பல வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், ஆண்ட்ராய்டு போன்களில் ஸ்லீப் டைமர் வசதியை யூடியூப் சோதனை செய்து வருகிறது. இந்த வசதி செயல்பாட்டிற்கு வரும் போது, வாடிக்கையாளர்கள் செட் செய்த ஸ்லீப் டைமர் நேரத்தில், வீடியோ தானாகவே நின்றுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் யூடியூப் செயலியை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

News June 29, 2024

நேரடி சேர்க்கை.. ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழகம் முழுவதும் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி தற்போது 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 1 முதல் 15ஆம் தேதி வரை தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறும். மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் செல்ல வேண்டும்.

News June 29, 2024

முடியாது என்றால் பதவி விலகுங்கள்: அன்புமணி

image

மது விலக்கு சாத்தியமில்லை என்றால் தமிழக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை இனியும் தள்ளிப்போடக் கூடாது என்ற அவர், மதுக்கடைகள் இருக்கும்போதே தமிழகம் முழுவதும் கள்ளச் சாராயம் ஆறாக ஓடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

News June 29, 2024

“C” எழுத்தில் உங்கள் பெயர் தொடங்குகிறதா?

image

“C” என்ற எழுத்தில் பெயர் தொடங்குவோருக்கு இருக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் குறித்து ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவை என்னென்ன? *கற்பனை சக்தி, படைப்பாற்றலை கொண்டிருப்பர். மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள் *குடும்பத்தினர் மீது அதிக அன்பு கொண்டிருப்பார்கள் *பழகியவர்களுக்காக உயிரையே கொடுப்பர் *மற்றவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள் என ஜோதிடம் கூறுகிறது.

News June 29, 2024

முதலில் பேட் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு?

image

இறுதிப் போட்டி நடைபெறும் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மைதானத்தில் முதலில் பேட் செய்த அணிகளே பெரும்பாலும் வென்றுள்ளதால், இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்யவே அதிக வாய்ப்புள்ளது. ரன் குவிப்புக்கு இந்த மைதானம் பெரிய அளவில் உதவாது எனக் கருதப்படுவதால், பவுலர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 29, 2024

உங்கள் குழந்தைகளிடம் படிக்கும் ஆர்வமில்லையா?

image

குழந்தைகளிடம் படிக்கும் ஆர்வம் குறைவது பெரும்பாலான பெற்றோரின் கவலையாக இருக்கிறது. படிக்கும் ஆர்வத்தை தூண்ட, குழந்தைகள் படிக்கும் போது, பெற்றோரும் அவர்களுடன் அமர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குழந்தைகள் படிக்கும் நேரத்தில், பெற்றோர் செல்ஃபோன், டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், முடிந்தால் புத்தகங்களை படிக்கும்படியும் கூறுகின்றனர். அதே போல, அழுத்தம் தரக்கூடாது என்கிறார்கள்.

News June 29, 2024

முதலிடம் பிடித்த இந்தியா

image

2023-24 நிதியாண்டில் வெளிநாடுகளில் உள்ள தமது குடிமக்களிடம் இருந்து அதிக தொகை பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் தாயகத்தில் உள்ள குடும்பத்தினருக்கு இந்தாண்டு ₹10 லட்சம் கோடியை அனுப்பியுள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 7.5% வளர்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News June 29, 2024

2011 தோனி ஆட்டத்தை 2024இல் கோலி தொடர்வார்: கைஃப்

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி என்ன செய்தாரோ, அதை கோலியாலும் செய்ய முடியும் என்று கூறிய அவர், 2011 உலகக் கோப்பையில் அதுவரை சிறப்பாக ஆடாத தோனி, இறுதிப் போட்டியில் மிகச்சிறப்பாக ஆடியதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!