news

News June 29, 2024

லிஃப்ட் வயர் அறுந்தால் என்னவாகும்?

image

சென்னை, புளியந்தோப்பு பகுதியில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக லிஃப்ட் அறுந்து விழுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் கட்டட பொறியாளர்கள். காரணம், லிஃப்ட் உடன் 4 முதல் 8 ஸ்டீல் வயர்கள் இணைக்கப்பட்டிருப்பதால், ஒரே ஒரு வயர் இருந்தாலும் லிஃப்ட் கீழே விழாது என்கிறார்கள். இருப்பினும், முறையான பராமரிப்பு அவசியம் எனக் கூறப்படுகிறது.

News June 29, 2024

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவரா நீங்கள்?

image

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வெற்றியாளர்களாக திகழ்வார்கள் என எண் கணித ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் 9 என்ற எண்ணின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் எனவும், 9 என்ற எண் வெற்றிக்கு தேவையான அதிர்ஷ்டத்தை வழங்கக்கூடியது என்றும் கூறுகின்றனர். அதீத உற்சாகமும், தைரியமும் கொண்ட இந்த நபர்கள், விளையாட்டு, காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட துறைகளை தேர்ந்தெடுத்தால் சிறந்து விளக்கலாம் என்கிறார்கள்.

News June 29, 2024

சிக்ஸரில் சாதித்த அக்ஷர் படேல்

image

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் அக்ஷர் படேல் இடம் பெற்றுள்ளார். 47 ரன்கள் எடுத்த அவர் 4 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் 6ஆவது இடத்திற்கு முன்னேறினார். 6 சிக்ஸர்களுடன் சாமுவேல் முதலிடத்திலும், 4 சிக்ஸர்களுடன் மிஸ்பா, கோலி, பிரைத்வைட், மிட்சல் மார்ஷ் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளனர்.

News June 29, 2024

தென்னாப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் இலக்கு

image

T20 WC இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை பறிகொடுத்து 176 ரன்கள் குவித்துள்ளது. ரோஹித், பண்ட், சூரியகுமார் யாதவ் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் இந்திய அணி தடுமாறியது. இதன்பின் அதிரடியாக விளையாடிய கோலி 76, அக்‌ஷர் படேல் 47 சிவம் தூபே 27 ரன்கள் குவித்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் மகாராஜ் 2 விக்கெட்டை கைப்பற்றினார்.

News June 29, 2024

எமர்ஜென்சி விவகாரத்தை தோண்டி எடுத்து விமர்சனம்

image

எமர்ஜென்சிக்கு பிறகு காங்கிரஸ் பெற்ற வெற்றியை, பாஜக பெறவில்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகத்தில் கட்டுரை எழுதியுள்ள அவர், எமர்ஜென்சி விவகாரத்தை பிரதமரும், பாஜகவினரும் தோண்டி எடுத்து விமர்சிப்பதாக கூறியுள்ளார். 1977 தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை சந்தேகத்திற்கு இடமின்றி காங்., ஏற்றுக்கொண்டதாகவும், அதன் பின் நடந்த தேர்தலில் காங்., மாபெரும் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

News June 29, 2024

அரை சதம் கடந்தார் கோலி

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலி அரை சதம் கடந்துள்ளார். இந்திய அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறிய நிலையில், பொறுப்புடன் விளையாடி வரும் கோலி, 48 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை ஒருமுறை கூட விராட் கோலி 50 ரன்கள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News June 29, 2024

குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கு ரத்து

image

நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மடிப்பாக்கத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ₹8 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்றதாக நடிகை குட்டி பத்மினி மீது 2011ல் வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

News June 29, 2024

இன்னும் 68 நாள்களே இருக்கிறது நண்பா..!

image

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘G.O.A.T’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே, விஜய் பாடிய 2 பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்தது. பிரசாந்த், மோகன், பிரபு தேவா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் செப்.5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரிலீஸுக்கு இன்னும் 68 நாள்கள் மட்டுமே உள்ளதை குறிப்பிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

News June 29, 2024

மாஸ்க்டு ஆதார் பெறுவது எப்படி?

image

UIDAI அமைப்பின் <>https://myaadhaar.uidai.gov.in/masked-aadhaar<<>> என்ற இணையதளத்தில், Login என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, ஆதார் எண் மற்றும் Captcha கொடுத்து, ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ள செல்ஃபோனுக்கு வரும் OTP மூலம் Login செய்ய வேண்டும். பின்னர் ‘Download Aadhaar’ என்பதை கிளிக் செய்து, ‘Masked Aadhaar’ என்ற ஆப்சனை தேர்வு செய்தால், மாஸ்க்டு ஆதார் டவுன்லோடு ஆகும்.

News June 29, 2024

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய இயக்குநர் நியமனம்

image

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக இருந்துவந்த அறிவொளி இன்றுடன் பணி ஒய்வு பெற்றார். இதையடுத்து, புதிய இயக்குநராக கண்ணப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடக்கக் கல்வி இயக்குநராக சேதுராமவர்மாவும், அரசு தேர்வு துறை இயக்குநராக லதாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!