India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டி காக் முதலிடம் பிடித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், தற்போது வரை 239 ரன்களை குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். இரண்டாவது இடத்தில் 238 ரன்களுடன் காலிஸ் (2009 ஆண்டு), மூன்றாவது இடத்தில் 187 ரன்களுடன் டுமினி (2009 ஆண்டு) உள்ளனர்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிக பந்துகளை சந்தித்து அரை சதம் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி மீண்டும் இடம்பெற்றுள்ளார். இன்றைய போட்டியில் 76 ரன்கள் எடுத்த கோலி, அரை சதம் எடுக்க 48 பந்துகளை எடுத்துக்கொண்டார். இதன் மூலம் அதிக பந்துகளை சந்தித்து அரை சதம் அடித்தவர்கள் பட்டியிலில் 2ஆவது இடத்திற்கு கோலி சென்றுள்ளார். முதலிடத்தில் 49 பந்துகளில் அரை சதம் அடித்த சூர்யகுமார் யாதவ் உள்ளார்.
* மேஷம் – ஆரோக்கியமான நாள், *ரிஷபம் – லாபம் கிடைக்கும் *மிதுனம் – நன்மை உண்டாகும், *கடகம் – வெற்றி கிடைக்கும் *சிம்மம் – தாமதம் ஏற்படும், *கன்னி – நல்லது நடக்கும், *துலாம் – பக்தி உண்டாகும், *விருச்சிகம் – மேன்மை ஏற்படும், *தனுசு – கவலையான நாளாக அமையும், *மகரம் – அமைதியான நாளாக அமையும், *கும்பம் – ஜாக்பாட் அடிக்கும், *மீனம் – ஆதரவு குவியும்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மகள் அஞ்சலி பிர்லா, 2019க்கு முன்னர் மாடலிங் துறையில் இயங்கிக்கொண்டிருந்தார். பின்னர், யுபிஎஸ்சி தேர்வு எழுதிய அவர், முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று, தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அஞ்சலி பிர்லா நேர்மையான முறையில் ஐஏஎஸ் ஆனாரா? இல்லை நீட் போன்று யுபிஎஸ்சி தேர்விலும் மோசடி நடந்ததா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நிதின் குப்தா ஜூன் 2022 முதல் மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் செப்டம்பர் 2023இல் முடிந்த நிலையில், ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் புதிய தலைவராக ரவி அகர்வாலை மத்திய அமைச்சரவை நியமித்துள்ளது. இவர் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினராக ஜூலை 2023இல் இருந்து பொறுப்பு வகிக்கிறார்.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த அணிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் 176 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை, இந்திய அணி படைத்துள்ளது. 173 ரன்களுடன் ஆஸி., அணியும், 172 ரன்களுடன் நியூசிலாந்தும், 161 ரன்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.
தமிழகம் முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் நாளை முதல் மருத்துவ முகாம் நடைபெறும் என்று மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கட்டுமான பணிகள் நடைபெறு இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்படும். இந்த முகாமில் வெளிமாநில தொழிலாளர்கள் பங்கேற்று, பயன்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘புறநானூறு’ படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் திரைக்கதையை உருவாக்க அதிக காலம் பிடிக்கும் என்பதால், படப்பிடிப்பு தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால், சூர்யா இப்படத்தில் இருந்து விலகியதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 2014ஆம் ஆண்டு 77 ரன்கள் அடித்திருந்த கோலி, தற்போது 76 ரன்கள் எடுத்துள்ளார். கேன் வில்லியம்ஸன் மற்றும் சாமுவேல்ஸ் இருவரும் 85 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியிலில் முதலிரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர், சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் என்று நடிகர் சரத்குமார் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலைகளில் தொடரும் உயிரிழப்புகளை நாம் எப்போது தடுக்கப்போகிறோம் எனக் கேள்வி எழுப்பிய அவர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பெருந்தொகையினை நிவாரணமாக வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.