India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காலையில் உடற்பயிற்சி செய்வது நல்லதா, மாலையில் செய்வது நல்லதா என சந்தேகம் இருக்கும். இதற்கு உடற்பயிற்சி ஆலோசகர்கள் சில யோசனைகளை முன்வைக்கின்றனர். இரவில் தூங்கி எழுந்ததும் உடல் புத்துணர்வுடன் இருக்கும் என்றும், இந்நேரத்தில் உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறப்பு என்றும், எடை குறைப்பு, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு காலை நேர உடற்பயிற்சி உகந்தது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
உக்ரைன், ரஷ்யா இடையேயான நடைபெற்றுவரும் போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் சில நிபந்தனைகளுடன் போர் நிறுத்தத்திற்கான செயல்திட்டத்தை ரஷ்ய அதிபர் புதின் முன்வைத்தார். இந்த சூழல் தங்களது போர் நிறுத்த ஒப்பந்த திட்டம் விரைவில் வெளியிடப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தற்போது கூறியுள்ளார். அதில் ரஷ்யாவின் திட்டத்திற்கு முரணான அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.
அடுத்த 2 ஆண்டுகளிலும் ஈடு இணையற்ற திட்டங்களை தீட்டித்தந்து 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் மகத்தான வெற்றிபெறுவோம் என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்வு முடிவுகளை சட்டமன்றத் தொகுதி வாரியாகப் பார்த்தால் திமுக 221 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்றவர், இதன் மூலம் மக்கள் மனதில் யார் உள்ளார்கள் என்பது நன்றாகத் தெரிவதாக கூறியுள்ளார்.
டெல்லியில் கடந்த 2 தினங்களாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக டெல்லியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 2 இண்டிகோ விமானங்களும், அங்கிருந்து சென்னை வரும் 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதவிர அனைத்து இண்டிகோ விமானங்களும் 30 நிமிடங்கள் தாமதமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஓய்வு.
* தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய இயக்குநராக கண்ணப்பன் நியமனம்.
* முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தொடங்க, பொறியியல் கல்லூரிகளுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது.
* செயற்கை கருத்தரித்தல் மையம் அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கேப்டனாக அதிக T20 போட்டிகளில் (50) வெற்றிபெற்ற வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். இவருக்கு அடுத்து பாபர் அசாம் (48, பாகிஸ்தான்), பிரையன் மசாபா (45, உகாண்டா), மோர்கன் (44, இங்கிலாந்து) ஆகியோர் உள்ளனர். மேலும், இரண்டு முறை T20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 2007ல் T20 உலகக் கோப்பையை வென்ற அணியிலும் ரோஹித் இடம்பெற்றிருந்தார்.
மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த திமுக 3 ஆண்டுகளில் எத்தனை மதுக்கடைகளை மூடியுள்ளது என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்தால் மக்களின் வாழ்வாதாரம் சீரழிந்து வருவதாகக் கூறியவர், இனியும் தாமதிக்காமல் வாக்குறுதியின் அடிப்படையில் மதுக்கடைகளை படிப்படியாகக் குறைத்து, பூரண மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பள்ளி மாணவர்களுக்கு தரமான மிதிவண்டிகளை வழங்கி வருவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. தரமற்ற மிதிவண்டிகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், மிதிவண்டிகள் ஒப்பந்தப்புள்ளி சட்டப்படி வாங்கப்படுகிறது, அதன் தரம் 2 நிலைகளில் சரிபார்க்கப்படுகிறது என தமிழக அரசு அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளது. மேலும், மிதிவண்டிகள் குறித்து வெளியாகும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
▶ஜூன்- 30 | ▶ஆனி – 16 ▶கிழமை: ஞாயிறு | ▶திதி: திதித்துவம் ▶நல்ல நேரம்: காலை 07:45 – 08:45 வரை, மாலை 03:15- 04:15 வரை ▶கெளரி நேரம்: காலை 10:45 – 11:45 வரை, மாலை 01:30 – 02:30 வரை ▶ராகு காலம்: மாலை 4:30 – 6:00 வரை ▶எமகண்டம்: பிற்பகல் 12:00 – 01:30 வரை ▶குளிகை: மாலை 03:00 – 04:30 வரை ▶சந்திராஷ்டமம்: மகம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்தியா தவிர்த்து வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016), இங்கிலாந்து (2010, 2022) அணிகள் தலா இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள. பாகிஸ்தான் (2009), இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.