news

News June 30, 2024

ராணுவ, கடற்படைத் தளபதிகளான பள்ளி நண்பர்கள்

image

இந்திய ராணுவத் தளபதியாக உபேந்திர திவேதி நாளை பதவியேற்கிறார். கடற்படை தளபதியாக தினேஷ் திரிபாதி பதவி வகிக்கிறார். அவர்கள் 2 பேரும் மத்திய பிரதேசத்தில் உள்ள சைனிக் பள்ளியில் 5ஆம் வகுப்பு முதல் ஒன்றாக படித்தவர்கள். இதேபோல் ரோல் நம்பர் வரிசையில் 931, 938 என அமைந்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றில் ஒரே வகுப்பு நண்பர்கள், தளபதிகளாக ஒரே நேரத்தில் பதவி வகிப்பது இதுவே முதல்முறையாகும்.

News June 30, 2024

ஒரே போட்டியில் விமர்சனத்தை உடைத்த கோலி

image

டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியின் ஃபார்ம் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. இறுதிப் போட்டிக்கு முன்பாக 7 போட்டிகளில் விளையாடி வெறும் 75 ரன்கள் மட்டுமே அவர் எடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று இறுதிப் போட்டியில் மட்டும் 76 ரன்கள் எடுத்து அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதுடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வையும் அறிவித்தார்.

News June 30, 2024

விரைவில் வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைப்பு

image

நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை, எளிய மக்கள் பயணிக்க முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில், அனைத்து மக்களும் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் கட்டணத்தை குறைக்க உள்ளதாக மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News June 30, 2024

வெள்ளை அறிக்கை கேட்கிறது பாமக

image

வன்னியர்கள் பெறும் இட ஒதுக்கீடு தொடர்பான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கேட்டு பாமக போராடி வருகிறது. ஆனால், அவர்கள் அதற்கு மேல் இடஒதுக்கீடு பெறுவதாக அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் பேசினார். இதனை நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார் என்று ஜி.கே.மணி அறைகூவல் விடுத்துள்ளார்.

News June 30, 2024

காலையில் இதை அருந்தினால் நோயெதிர்ப்பு அதிகரிக்கும்

image

காலையில் வெறும் வயிற்றில் எதை அருந்தலாம் என்பது குறித்து மருத்துவர்கள் சில யோசனைகளை தெரிவிக்கின்றனர். வெறும் வயிற்றில் தர்பூசணி சாறை அருந்தினால், உடல்சூடு தணிந்து, நீர்ச்சத்து அதிகரிக்கும் என்றும், அதில் வைட்டமின் சி சத்து இருப்பதால் சத்து குறைபாடும் போகும் என்றும் கூறுகின்றனர். அத்துடன், உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதோடு, செரிமானத்தை மேம்படுத்தும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

News June 30, 2024

அரசன் எப்போதும் அரசன் தான்

image

டி20 உலகக் கோப்பை தொடரின் ஆரம்பம் முதலே விராட் கோலியின் ஆட்டம் விமர்சனங்களை பெற்று வந்தது. எந்தவொரு போட்டியிலுமே சோபிக்காத அவர், அணிக்கு தேவையா என்பது வரை பலர் விமர்சனம் செய்தனர். ஆனால் தான் ஒரு அரசன்தான் என்பதை கோலி இறுதிப் போட்டியில் நிரூபித்திருக்கிறார். நேற்றைய போட்டியில் அவருடைய 76 ரன்கள்தான் அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்திருக்கிறது.

News June 30, 2024

தமிழகத்தில் என்ஐஏ திடீர் சோதனை

image

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் காலையிலேயே திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை உட்பட 12 இடங்களில் இந்த சோதனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிஜ்புத் தகர், அல் உம்மா ஆகிய இயக்கங்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.

News June 30, 2024

தோஷங்களைப் போக்கும் பாடி திருவல்லீஸ்வரர் கோயில்

image

சென்னை பாடியில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான திருவல்லீஸ்வரர் கோயில் மூலவர் “திருவல்லீஸ்வரர்”, அம்பாள் “ஜெகதாம்பிகை” என்று அழைக்கப்படுகின்றனர். வியாழ பகவான் இங்குள்ள இறைவனை வழிபட்டு சாபத்திலிருந்து விடுபட்டதால் குரு தலமாகவும் கருதப்படுகிறது. இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை மனமுருகி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்றும், இங்குள்ள குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை.

News June 30, 2024

கோப்பையை வென்று கொடுத்த ரோஹித்தின் கேப்டன்சி

image

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி பார்க்கப்படுகிறது. ஆரம்பம் முதலே அணியை திறமையாக கையாண்ட அவர், இறுதிப் போட்டியில் பல முக்கிய நகர்வுகள் மூலம் கவனம் ஈர்த்தார். குறிப்பாக 18ஆவது ஓவரிலேயே பும்ராவின் ஸ்பெல்லை முடித்தது, 19ஆவது ஓவரை அர்ஷ்தீப் கையில் கொடுத்தது, ஷிவம் துபேவை இடம் மாற்றாமல் இறக்கியது உள்ளிட்டவை வெற்றியை பரிசாக்கியிருக்கின்றன.

News June 30, 2024

இந்திய அணிக்கு தோனி வாழ்த்து

image

கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்ஸ்டாகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். “உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் சார்பாக கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள். மேலும், என்னுடைய பிறந்தநாள் பரிசாக கோப்பையை வென்றதற்கும் நன்றி” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து X தளத்தில் MSDhoni டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

error: Content is protected !!