news

News June 30, 2024

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ்ஆர் சிலைக்கு தீ வைப்பு

image

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டியின் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். பாபட்லா மாவட்டத்தில் உள்ள பட்டிப்ரோலு பகுதியில் உள்ள அவரது சிலை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த YSRC தொண்டர்கள் அந்த பகுதியில் குவிந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

News June 30, 2024

சாதிவாரி கணக்கெடுப்பை ஸ்டாலின் வலியுறுத்த காரணம்?

image

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியத்தை பட்டியலிட்டு, மோடிக்கு மு.க. ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியுள்ளார். நாட்டில் அதிக எண்ணிக்கையில் உள்ள பெரும்பான்மை சாதியினர் ஆட்சி நிர்வாகத்திலும், பிற துறைகளிலும் எந்தளவு பங்கு வகிக்கின்றனர், அதே துறைகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட உயர்சாதியினர் எந்தளவு உள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட முடியும் என்பதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

News June 30, 2024

ஏமாற்றம் அளித்த துபே, ஜடேஜா

image

நடந்துமுடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த கூட்டு முயற்சியே நமக்கு கோப்பையை வென்று தந்திருக்கிறது. ஆனால், துபே மற்றும் ஜடேஜா இருவரும் தங்களது முழு உழைப்பை செலுத்தவில்லை என்ற விமர்சனம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. வழக்கமாக, சுழற்பந்தின் மூலம் வெற்றி கொடிகட்டும் ஜடேஜா, இத்தொடரில் அதையும் செய்யத் தவறியிருக்கிறார்.

News June 30, 2024

பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

image

விருதுநகரில் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் நேற்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பட்டாசு தயாரிக்க கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளர் குருசாமி பாண்டியனையும், அவரது மகனையும் கைது செய்தனர்.

News June 30, 2024

ஹெல்மெட் அணியாதோருக்கு 2 முறை அபராதம் விதிக்கலாமா?

image

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஒரு நபருக்கு ஒரே நாளில் 2 முறை அதே காரணத்துக்காக அபராதம் விதிக்க 2016ஆம் ஆண்டு வாகன திருத்த சட்டத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில் ஹெல்மெட் உள்ளிட்ட காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டால், அதே காரணத்துக்காக, அதே நாளில் அபராதம் விதிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

News June 30, 2024

கேட்ச்சில் சாதித்த ரஷீத் கான்

image

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியிலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரான் (17 சிக்சர்) முதலிடத்தில் உள்ளார். குர்பாஸ் 16 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும், 15 சிக்ஸர்களுடன் ரோஹித் ஷர்மா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் ரஷீத் கான் (16 ) முதலிடத்திலும், மார்க்கரம் (8), ஸ்டப்ஸ் (7) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News June 30, 2024

அடுத்த டி20 கேப்டன் யார்?

image

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். இதனால், அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே, ருதுராஜ், ரிஷப் பண்ட், KL.ராகுல், சூர்யகுமார், ஹர்திக், ஷுப்மன் கில் ஆகியோர், இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி சென்றிருக்கின்றனர். மீண்டும் இவர்களில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா அல்லது புதியவருக்கு வழங்கப்படுமா?

News June 30, 2024

திருமணத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது எப்படி? (1/3)

image

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009 படி திருமணப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, திருமணம் முடிந்த தம்பதிகள் 90 முதல் 150 நாள்களுக்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுக்க இந்த சட்டம் வழிவகுத்துள்ளது. திருமணத்தை ஆன்லைன் மூலம் எப்படி பதிவு செய்வது எனத் தெரிந்து கொள்ளலாம்.

News June 30, 2024

திருமணத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது எப்படி? (3/3)

image

விண்ணப்பித்து முடித்தவுடன் அருகிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அது அனுப்பி வைக்கப்படும். அதன் பின்பு, சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பிக்கும்போது அளித்த மொபைல் எண்ணுக்கு SMS வரும். அதில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டிய தேதி, நேரம் இருக்கும். அன்றைய தினத்தில், ஆன்லைன் விண்ணப்பம், ஒரிஜினல் ஆவணங்கள், 4 சாட்சிகளுடன் சென்று திருமணப்பதிவு சான்று பெறலாம்.

News June 30, 2024

திருமணத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது எப்படி? (2/3)

image

சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்தும், ஆன்லைனில் விண்ணப்பித்தும் திருமணத்தை பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க,<>https://tnreginet.gov.in/portal/<<>> என்ற இணையதள பக்கத்தில் திருமணப்பதிவு பகுதிக்குச் சென்று, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து, மணமக்கள், சாட்சிகளின் படங்களுடன் பதிவேற்ற வேண்டும்.

error: Content is protected !!