India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். எந்த நிறுவனம், எவ்வளவு முதலீடுகளை ஈர்க்க அவர் செல்கிறார் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், முதல்வரின் ஸ்பெயின் பயணத்தால் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினார். முதல்வர் அமெரிக்கா செல்ல உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் TRB ராஜா கூறியிருந்தார்.
தமிழகத்தில் மாலை 4 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளைச்சல் அதிகரித்து பூக்களின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல்லில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பூக்கள் செல்வது வழக்கம். அந்தவகையில், திண்டுக்கல் பூ சந்தையில் கடந்த வாரம் கிலோ ₹1000க்கு மேல் விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று ₹500க்கும், ₹700க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ ₹60க்கும், ₹150க்கு விற்கப்பட்ட சம்பங்கி ₹15க்கும் விற்பனையாகிறது.
ஆண்டுதோறும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்தாலும் அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார். விஷச்சாராயத்தால் தமிழ்நாட்டில் இனி ஒரு மரணம் கூட நிகழக்கூடாது என்ற அவர், அமைச்சர் பொறுப்பில் உள்ள துரைமுருகன் போன்றவர்களே, குடியை ஊக்குவிப்பது போல் பேசுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாக சாடியுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடு பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அத்துடன், நலத்திட்டம் பெறுவோர் ஆதார் வைத்திருக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் நலத் திட்டங்களுக்காக விண்ணப்பிக்கும் முன்னர், ஆதார் எண்ணைப் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மே மாதம் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் நீட் எதிர்ப்பு போராட்டம் தீவிரமெடுத்துள்ளது.
1983 – ஒருநாள் உலகக் கோப்பை
2002 – சாம்பியன்ஸ் டிராஃபி
2007 – டி20 உலகக் கோப்பை
2013 – சாம்பியன்ஸ் டிராஃபி
2018 – ஆசியக் கோப்பை
2023 – ஆசியக் கோப்பை
2024 – டி20 உலகக் கோப்பை
*வணிகம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம் *குறிப்பிட்ட சில SBI கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்பட்ட ரிவார்ட் பாயிண்ட்ஸ் நிறுத்தம் *IT கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி. *ICICI கிரெடிட் கார்டு மாற்றுக் கட்டணம் ₹100லிருந்து ₹200ஆக உயர்கிறது *போன் எண்ணை மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவதற்கு, புதிய விதிமுறை *செயல்பாட்டில் இல்லாத Paytm Payment வங்கி கணக்குகள் ஜூலை 20 முதல் முடக்கம்.
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, ஹீரோவாக அறிமுகமாகும் ‘நேசிப்பயா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் நயன்தாரா கலந்து கொண்டு பேசியபோது, தாம் எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை என்றும், ஆனால், 15 வருடமாக விஷ்ணுவர்த்தன் குடும்பம் பழக்கம் கொண்டது என்பதால், இதை ரொம்ப ஸ்பெஷலாக கருதி கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
துணை சபாநாயகர் பதவிக்கு INDIA கூட்டணி சார்பாக உ.பி ஃபைசாபாத் தொகுதியில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி மூத்த தலைவர் அவதேஷ் பிரசாத் முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 9 முறை எம்எல்ஏவாகவும், முதல் முறையாக எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர். எதிர்க்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்க பாஜக முன்வருமா? என்ற கேள்வியும் ஒருபக்கம் எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.