India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரும்பாலான பெண்களுக்கு பிடித்தமான விஷமாக இருப்பது ஷாப்பிங். சிலர் மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்காக ஷாப்பிங் செய்வார்கள். ஆனால், தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிப்பது ‘ஷாப்பிங் டிஸார்டர்’ என்ற ஒரு வகை மனநோய்க்கு வித்திடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த வகை மனநோய்க்கு ஆளானவர்கள், கடன் வாங்கி ஷாப்பிங் செய்யவும் முயல்வதால், கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிரபாஸ், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898AD’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், படம் வெளியான 3 நாள்களில் உலகளவில் ₹415 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக வசூலை குவிக்க வாய்ப்பு உள்ளது. வெளியான முதல் நாளிலேயே இப்படம் ₹191.5 கோடி வசூலித்தது.
பணப்பரிவர்த்தனைக்கு UPI அதிகம் பயன்படுத்தப்படுவதை பயன்படுத்தி, மோசடி நபர்கள் புதுப்புது வழிகளில் கைவரிசை காட்டி வருகின்றனர். உங்களுக்கு பணம் அனுப்புகிறோம், Pin எண் சொல்லுங்கள் எனக் கேட்டு பெற்று வங்கிக் கணக்கில் பணத்தை திருடி விடுகின்றனர். பொதுவாக பணத்தை அனுப்ப மட்டுமே Pin பதிவிட வேண்டும். பணத்தை பெற அதை தெரிவிக்க வேண்டியதில்லை. இது தெரிந்திருந்தாலே மோசடியிலிருந்து தப்பலாம்.
கள்ளச் சாராயத்தை ஊக்குவிக்கும் வகையில் பேசியதாக அமைச்சர் துரைமுருகனுக்கு, ஒபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை மதுவிற்கு அடிமையாக்கும் வேலையை திமுக செய்வதாக கூறிய அவர், ஆளும் கட்சியின் ஆசியோடு கள்ளச்சாரயம் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர் என்றார். முன்னதாக, டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்ற துரைமுருகன் பேசியதற்கு பலரும் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.
கேரளாவில் கூகுள் மேப் உதவியுடன் காரில் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டிருந்த இருவர், ஆற்றில் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் ஆற்றில் அடித்துச் சென்ற நிலையில், அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த மரக்கிளையில் சிக்கிக் கொண்டது. பிறகு, தீயணைப்புத் துறையினர் அவர்களை போராடி மீட்டனர். கூகுள் மேப்பில் காட்டிய பாதையை பின் தொடர்ந்த போது, ஆற்றில் கார் சிக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரேஷனில் பொருள்கள் பெற அளிக்கப்படும் பிளாஸ்டிக் ஸ்மார்ட் அட்டை தொலைந்து போனாலோ, திருடு போனாலோ, உடைந்து போனாலோ, மாற்று அட்டை பெற தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவர் அல்லது தலைவி, சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம் சென்று நேரில் விண்ணப்பித்தோ, ஆன்லைனில் விண்ணப்பித்தோ புதிய ரேஷன் அட்டையை பெறலாம்.
ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க <
நீட் புகார்களுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என எம்.பி சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்தால் அயோத்தி ராமரையே பாஜகவினர் கை கழுவி விடுவார்கள் என்றும், ராமர் கோயில் உள்ள தொகுதியில் வென்ற காங். எம்.பி மோடிக்கு எதிரே அமர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மக்களவையில் முன்பு ஜெய்ஸ்ரீராம் கோஷம் காதைப் பிளக்கும் என்றும் தற்போது சப்தநாடிகளும் அடங்கிப்போயுள்ளதாகவும் அவர் கூறினார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை டி20 தொடர் நாயகன் விருதை இந்திய பேட்டர்களே வென்று வந்த நிலையில், முதல் முறையாக பவுலரான பும்ரா அந்த விருதை பெற்றுள்ளார். இந்த தொடரில் பும்ரா 15 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். முன்னதாக, சச்சின், யுவராஜ் சிங், ஷிகர் தவான், விராட் கோலி உள்ளிட்டோர் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளனர்.
தமிழகத்தில் சில மலைப் பகுதிகளில் மட்டும் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்யலாம். மற்ற பகுதிகளில் இரண்டு நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.