India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘திருமணம்’, ‘சித்தி 2’ ஆகிய சீரியல்களில் நடித்த ப்ரீத்தி, ‘மலர்’ சீரியலில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், அவர் திடீரென ‘மலர்’ சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சின்னத்திரை வட்டாரத்தில் விசாரித்ததில், சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கும் அவர், கர்ப்பமாக இருக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்து சீரியலில் இருந்து விலகியதாக கூறுகிறார்கள்.
மம்தா பானர்ஜி என்னை மிரட்ட முடியாது என மே.வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் கூறியுள்ளார். மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் மம்தாவை மதிப்பதாக தெரிவித்துள்ள அவர், அதற்காக எனது சுய மரியாதையில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, மே.வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஆளுநர் மாளிகை செல்லவே பெண்கள் அச்சப்படுவதாக மம்தா கூறியிருந்தார்.
CSK அணியின் ‘தளபதி’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஜடேஜா, T20 போட்டிகளில் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்று வடிவிலும் கலக்கியுள்ளார். இக்கட்டான நேரத்தில் கை கொடுக்கும் ஜடேஜா, சில சமயங்களில் சொதப்புவதும் உண்டு. ஓடிச் சென்று கேட்ச் பிடிப்பது, ரன்அவுட் ஆக்குவது என அவரது ஃபீல்டிங் திறமை அசாத்தியம். ஜடேஜாவின் இந்த ஓய்வு அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாட்டின் முதன்மை வங்கியான SBI, புதிதாக 400 கிளைகள் திறக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது. இதனால், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு உருவாகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக, புதிய கிளைக்கு தேவையான அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் ஓய்வு பெறுவது போன்றவற்றால், 6000 முதல் 8000 வேலைவாய்ப்புகள் உருவாகலாம், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் விதிமீறல் நடப்பதால், தேர்தல் அதிகாரியை உடனே மாற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஜூலை 10ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், திமுகவினர் ஆயிரக்கணக்கான கார்களில் வலம்வருவதாக குற்றம்சாட்டிய அவர், இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி அமல்படுத்தி நாளையுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், MSME நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட ஜிஎஸ்டியில் பல திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என தொழிலதிபர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான வரம்பை ₹40 லட்சத்தில் இருந்து, ₹1.50 கோடியாக உயர்த்த வேண்டும், ஜிஎஸ்டி வரியை மாநில அரசுகளுக்கு உரிய அளவில் பிரித்து தர வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக உள்ளது.
வெளிநாட்டினருக்கு இந்தியா 9 வகை விசாக்களை வழங்குகிறது. அவை என்னென்ன? *வேலைவாய்ப்பு விசா *பிசினஸ் விசா *புராஜெக்ட் விசா *என்ட்ரி விசா *சுற்றுலா விசா *ஆராய்ச்சி விசா *டிரான்சிஸ்ட் விசா *கான்பரன்ஸ் விசா *மெடிக்கல் விசா ஆகும். இதில் வேலைவாய்ப்பு விசா, பிசினஸ் விசா, என்ட்ரி விசா, ஆராய்ச்சி விசா ஆகியவை 5 ஆண்டு செல்லக்கூடியது. புராஜெக்ட் விசா, மெடிக்கல் விசா 1 ஆண்டு செல்லக்கூடியதாகும்.
தமிழில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம், சூரிய நகரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் மீரா நந்தன். இவருக்கும் லண்டனில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜு என்பவருக்கும் குருவாயூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து, திரையுலகினரும், ரசிகர்களும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
பிஹாரை தொடர்ந்து தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிதிக் மாவட்டத்தில் ஆர்கா நதியின் இடையே 5.5 கோடி பொருட்செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. கனமழை காரணமாக பாலம் இடிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, பிஹாரில் 9 நாள்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
‘கிக்’ இல்லாததால் கள்ளச்சாராயம் குடிக்கப்படுவதாக கூறுவதா? என அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகனின் கருத்து, கள்ளச்சாராய வியாபாரம் தமிழ்நாட்டில் அமோகமாக கொடிகட்டி பறக்க அரசே இதை ஊக்குவிப்பது போல் அமைந்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், கள்ளாச்சாராய உயிரிழப்புகள், போதைப் பொருட்கள் விற்பனைதான் திமுக ஆட்சியின் சாதனைகள் என அவர் விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.