India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டாஸ்மாக் கடைகளை மூடினால் தமிழக மக்கள் முதல்வரை பாராட்டுவார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கள்ளுக்கடைகளை திறப்பதால் மட்டும் கள்ளச்சாராய உயிரிழப்புக்களை தடுக்க முடியாது என்ற அவர், மது கடைகளை முழுவதும் அகற்றுவதே இந்த உயிர் பலிகளை தடுப்பதற்கான தீர்வு என்றார். மேலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தி செப்.,17இல் பெண்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை, மாவட்டத்திற்கு வெளியேயும் பணி நிரவல் செய்யலாம் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், உபரி ஆசிரியர்களை பிற அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியமர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிநிரவல் நடவடிக்கைக்கு பள்ளி நிர்வாகங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதயம் நிறைந்த நன்றியுடன், டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். இது குறித்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வலிமையான குதிரை பெருமையுடன் துள்ளிக் குதிப்பதைப் போல, தன்னால் முடிந்ததை நாட்டிற்காக செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது டி20 உலகக்கோப்பை கனவு நனவானதாகவும், அனைத்து நினைவுகளுக்கும், ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக இந்திய பங்குச்சந்தை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் டாப் 9 நிறுவனங்களின் பங்கு மதிப்பு ₹2.89 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஏர்டெல், எஸ்பிஐ வங்கி, இன்போசிஸ், இந்துஸ்தான் யூனிலிவர், ஐடிசி ஆகியவை அடங்கும். அதிகபட்சமாக ரிலையன்ஸ் மதிப்பு ₹1.52 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், குறைந்த வாடிக்கையாளர்களை கொண்ட நாடுகளில் சந்தாவை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கென்யாவில் இலவச சேவை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜப்பான் மற்றும் ரஷ்யாவில் இலவச சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாயினும், குறைந்த காலத்திற்குதான் இலவச சேவை கிடைக்கும்.
மது விற்பனையில் மட்டுமே தமிழக அரசு கவனம் செலுத்துவதாக இருப்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். பொறுப்பாக செயல்பட வேண்டிய அமைச்சர்களே மதுகுடிக்க ஊக்கப்படுத்துவதை போல் பேசுவதாக தெரிவித்த அவர், கள்ளச்சாரய பலிகளுக்கு காரணமான நபர்களை கண்டறியவே சிபிஐ விசாரணை கேட்பதாக தெரிவித்துள்ளார். உயிர் பலிகளுக்கு பொறுப்பேற்று அத்துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றார்.
பீஹார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்பது எங்களது அடிப்படை கோரிக்கை, இது NDA கூட்டணி அரசுக்கான அழுத்தம் கிடையாது என மத்திய அமைச்சரும், லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவருமான சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். பீஹாரில் உள்ள மாநில கட்சிகள் எந்த நிலைபாடு எடுத்தாலும் கவலை இல்லை, சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்ற கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கம் கொண்டவர்கள் என எண் கணித ஜோதிடர்கள் கூறுகின்றனர். 1ஆம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் எனவும், இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சூரியனை போன்று தலைமை பண்பு மிக்கவர்கள் என்றும் தெரிவிக்கின்றனர். அதீத நம்பிக்கை அவர்களை பொறுப்பாக செயல்பட வைக்கும். அதே நேரம், தாங்கள்தான் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்ற எண்ணத்தோடு கர்வமாக இருப்பார்கள் என்கிறார்கள்.
இந்தியாவில் அதிக சம்பளம் வழங்கும் 5 துறைகளின் பட்டியலை நியூஸ் 18 ஊடகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, டேட்டா சயின்டிஸ்ட்கள் சராசரியாக ஆண்டுக்கு ₹15 லட்சமும், செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்கள் ஆண்டுக்கு ₹20 லட்சமும், பிளாக்செயின் டெவலப்பர்கள் சராசரியாக ஆண்டுக்கு ₹12 லட்சமும், மேலாண்மை ஆலோசகர்கள் ₹20 லட்சமும், முதலீட்டு வங்கியாளர்கள் ₹15 லட்சம் வரையும் சம்பளம் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை, தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி NIA அதிகாரிகள் கைது செய்தனர். தமிழகத்தில் 10 இடங்களில் இன்று சோதனை மேற்கொண்ட NIA, சாலியமங்கலத்தைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான், அப்துல் ரகுமானை உபா சட்டத்தில் கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய செல்போன், லேப்டாப், பென்டிரைவ் போன்ற சாதனங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.