news

News June 30, 2024

இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்

image

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நள்ளிரவு 1 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

News June 30, 2024

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகைகள்..!

image

*கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா, வெளிநாட்டில் சிகிச்சை எடுத்து, அதில் இருந்து மீண்டு வந்தார். *’சிவப்பதிகாரம்’ பட நடிகை மம்தா மோகன்தாஸ் ஹாட்ஜ்கின் லிம்போமா கேன்சரால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டார். *கெளதமி 35 வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளார். *தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக, நடிகை ஹினா கான் தற்போது அறிவித்துள்ளார்.

News June 30, 2024

திங்கள் கிழமையில் இதை செய்யலாமா?

image

‘திங்கள் என்பது மங்களம்’ எனக் கூறப்படுவது உண்டு. சந்திர பகவானுக்கு ஏற்ற நாள் என்பதால், திங்கள் கிழமைகளில் தங்கம், வெள்ளி வாங்குவது சிறப்பானது. அரிசி, சர்க்கரை, பால் ஆகியவற்றை வாங்கினால் குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும். இதுதவிர, புதிய செயல்களை இந்த நாளில் தீர்க்கமாக தொடங்கலாம். பயணங்கள் மேற்கொள்வதில் அனுகூலம் கிட்டும். திட்டமிட்ட அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

News June 30, 2024

FDக்கு பதில் NCDயில் முதலீடு செய்யலாமா?

image

வங்கிகளில் வைப்புத்தொகைக்கு குறைந்த வட்டி கிடைப்பதாக கருதுபவர்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் வெளியிடும் NCDயில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதில், முதலீட்டு காலத்தை பொறுத்து 9 – 12% வரை வட்டி கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரம், முதலீடு செய்யும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வது அவசியம். மேலும், AAA, AA+, AA ஆகிய ரேட்டிங் கொண்ட NCDயில் முதலீடு செய்ய பரிந்துரைக்கின்றனர்.

News June 30, 2024

நாளை கடைசி: மத்திய அரசில் வேலை

image

எல்லைப் பாதுகாப்புப் படையில் உள்ள 178 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 1) கடைசி நாளாகும். SI, Constable, Driver பணியிடங்களில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, 12ஆம் வகுப்பு, டிப்ளமா. வயது வரம்பு: 20-28. சம்பளம்: ₹21,700 – ₹1,12,400. விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவலுக்கு <>BSF<<>> இணைய முகவரியை கிளிக் செய்யவும்.

News June 30, 2024

தனிநபர் கடன் பெற சில டிப்ஸ்

image

அவசரத் தேவைக்காக பெறும் தனிநபர் கடனை, சரியான முறையில் பெற சில டிப்ஸ்..
*வங்கிகள், ஆன்லைன் செயலிகளின் அங்கீகாரம், உண்மைத் தன்மையை ஆராயவும்.
*பிடித்தங்கள் போக, எவ்வளவு தொகை கிடைக்கிறது என்பதை சரிபார்க்கவும்.
*கடன் தொகை, திருப்பி செலுத்தும் தொகையின் வித்தியாசத்தை கணக்கிட்டு பெறலாம்.
*ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், அதிலுள்ள முக்கிய விவரங்களை படித்த பிறகு இறுதி முடிவை எடுக்கவும்.

News June 30, 2024

NET BANKING பயன்படுத்துவோர் கவனத்திற்கு

image

இந்தியாவில் தற்போது ஆன்லைன் பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில், நெட் பேங்கிங் மூலம் பணம் அனுப்புபவர்கள் பின்பற்ற வேண்டிய சில முறைகள்.
*00000, 11111 போன்ற பலவீனமான பாஸ்வேர்டுகளை தவிர்க்கவும்
*இலவச வைஃபையில் பணம் அனுப்புவதை தவிர்க்கவும்
*சந்தேக லிங்குகளை கிளிக் செய்வதை தவிர்க்கவும் *User Name, பாஸ்வேர்டை பகிர்வதை தவிர்க்கவும் *சாப்ட்வேர் அப்டேட்களை புறக்கணிப்பதை தவிர்க்கவும்.

News June 30, 2024

இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா..?

image

*தூக்கம் வரவில்லை என்றால், அடிக்கடி கடிகாரத்தை பார்க்காதீர்கள். இது நீங்கள் தூங்குவதை மேலும் கடினமாக்கலாம். *தூங்குவதற்கு முன்பாக மனதை அமைதிப்படுத்தி, உடலை தூக்கத்திற்கு தயார் படுத்துங்கள். ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், தியானம் செய்வது மன அழுத்ததை குறைத்து, விரைவாக தூங்க உதவும். *லாவண்டர், ஜாஸ்மின் போன்ற வாசனை திரவியங்களை படுக்கை அறையில் பயன்படுத்துவது, தூக்க சூழலை நறுமணத்துடன் வைத்திருக்க உதவும்.

News June 30, 2024

உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர்: அண்ணாமலை

image

டாஸ்மாக் மதுபானம் தரமானதாக இல்லை, `கிக் இல்லை’ என அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான். அதனால் தான், சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை நாடுகின்றனர் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், சென்னையை பொறுத்தவரை சுகாதாரம் என்பது அதலபாதாளத்தில் தான் உள்ளது. உதாரணமாக ’ஸ்வச் பாரத்தில்’ 44வது இடத்தில் இருந்த சென்னை, தற்போது 200வது இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என குற்றஞ்சாட்டினார்.

News June 30, 2024

முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: இபிஎஸ்

image

திருப்பூர் மாவட்டம் மாவடப்பு மலைக்கிராமத்தைச் சேர்ந்த இருவர் மதுவுடன் கள்ளச்சாராயம் கலந்து அருந்தியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் செய்திகள் வருவதாக இபிஎஸ் எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!